இலங்கைக்கு இந்த நிலைமையா? ஆப்கானிஸ்தானிடம் 105 ரன்களில் சுருண்டது..மிரண்ட ரசிகர்கள்
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் வச்சு செய்தது.
Recommended Video
இலங்கை அணி நடப்பாண்டில் விளையாடிய 11 போட்டியில் 2 டி20 போட்டியில் மட்டுமே வென்று இருக்கிறது.
இந்த நிலையில் தங்களது 100வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதற்கு காரணம், இரண்டாவது பேட்டிங் செய்த அணியே கடந்த 10 போட்டியில் 9 போட்டியில் வென்று இருக்கிறது.

இலங்கை தடுமாற்றம்
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தானே, பிரிச்சி மெஞ்சிடலாம் என நினைத்த இலங்கை வீரர்களுக்கு ஷாக் கொடுத்தனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள். தொடக்க வீரராக களமிறங்கிய குசேல் மெண்டிஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் நட்சத்திர வீரர் அசலங்கா டக் அவுட் ஆகினர்.தொடக்க வீரர் நிசாங்கா 3 ரன்களில் பெவிலியன் திரும்ப, இலங்கை அணி 5 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ராஜபக்சா போராட்டம்
இதனையடுத்து ஐபிஎல் வீரரான பனுகா ராஜபக்சாவும், குணதிலகாவும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆப்கான் வீரர் உமர் வீசிய ஒரு ஒவரில் 20 ரன்கள் விளாசியது. இதனால் இலங்கை அணி மீண்டும் ரன் குவிக்கும் பாதைக்கு திரும்பி விட்டது என அந்நாட்டு ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
ஆனால், அந்த நிம்மதி கொஞ்சம் கூட நிலைக்கவில்லை. ராஜபக்சா 38 ரன்களில் துரதிர்ஷடவசமாக ரன் அவுட் ஆனார். குணதிலகா 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி வீரர் ஹசரங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷனகா டக் அவுட் ஆனார்.

105 ரன்களில் சுருண்டது
சிஎஸ்கே வீரர் மகீஷ் தீக்சனாவும் பந்தையே சந்திக்காமல் ரன் அவுட் ஆனார். இதே போன்று அறிமுக வீரராக களமிறங்கிய பதிரானாவும் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை அணி டி20 வரலாற்றில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த கலங்கத்தை கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வீரர்கள் துடைக்க இறுதியில், 105 ரன்களில் இலங்கை சுருண்டது. ஃபருகி 3 விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications