Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சாலையை கிராஸ் செய்யும் போது விபத்து".. கோமாவில் போராட்டம்.. ஆப்கான் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!

காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நஜீப் தரக்கை சாலை விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இன்று பலியானார்.

2020ம் ஆண்டில் உலகம் முழுக்க பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் திடீரென மரணமடைந்து வருகிறார்கள். சினிமா, அரசியல், விளையாட்டு என்று பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களின் திடீர் மரணம் உலகை உலுக்கி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்தான் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் மரணம் அடைந்தார். மும்பையில் திடீர் என்று மாரடைப்பு வந்து அகால மரணம் அடைந்தார்.

இன்று என்ன

இன்று என்ன

இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நஜீப் தரக்கை சாலை விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இன்று பலியானார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கினார். சாலையை கடக்கும் போது இவருக்கு விபத்து ஏற்பட்டது.

வேகமாக வந்த கார்

வேகமாக வந்த கார்

வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர், தலையில் காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இந்த காயம் காரணமாக நஜீப் தரக்கை கோமாவிற்கு சென்றார். கோமாவில் கடந்த ஒரு வாரமாக இவருக்கு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

சிகிச்சை

சிகிச்சை

இதனால் இவருக்கு அவசர ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் ஆபரேஷனுக்கு பின்பும் இவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் இன்று நஜீப் தரக்கை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோமாவில் போராடியவர் நினைவு திரும்பாமலே இன்று பலியானார்.

யார்

யார்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக இவர் ஓப்பனிங் பேட்டிங் இறங்கி வந்தார். 2014ல் இவர் முதல் தர போட்டிகளில் அறிமுகம் ஆனார். அதன்பின் சர்வதேச போட்டிகளால் ஆடியவர் 12 டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கடைசியாக நஜீப் தரக்கை வங்கதேசம் அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் ஆடினார்.

கொரோனா

கொரோனா

அதன்பின் லாக்டவுன் காரணமாக போட்டிகள் நடக்காத நிலையில் தற்போது நஜீப் தரக்கை சாலை விபத்தில் பலியாகி உள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த ஓப்பனிங் வீரராக இவர் கருதப்பட்டார். எதிர்காலத்தில் அணியின் கேப்டன்சி நஜீப் தரக்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இவர் பலியாகி உள்ளார்.

Story first published: Tuesday, October 6, 2020, 11:01 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+