கேப்டன்
ஆப்கானிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். பந்துவீச்சிலும் அணிக்கு கை கொடுப்பார். 2015இல் அவர் கேப்டன் ஆன பின் ஆப்கானிஸ்தான் அணி பல முக்கிய வெற்றிகளை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிகரமான கேப்டன் இவர் தான்.
பெயரை மாற்றிக் கொண்டார்
இதில் மற்றொரு ஆச்சரிய தகவல், இவரது உண்மையான மாற்றிக் கொண்டு நாட்டின் பெயரை வைத்துக் கொண்டால் தான் தங்கள் கிரிக்கெட் அணிக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும் என கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் கூறியதை ஏற்று தன் பெயரை அஸ்கார் ஆப்கன் என நாட்டின் பெயருடன் இணைத்துக் கொண்டவர்.
நிச்சயதார்த்தம்
இத்தனை சிறப்பு வாய்ந்த வீரரான அஸ்கார் ஆப்கன் தற்போது இரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகி உள்ளார். இரண்டாவது முறையாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டு வாழ்க்கையில் இரண்டாம் இன்னிங்க்ஸ்-க்கு தயாராகி இருக்கிறார். இது பற்றி ஆப்கன் பத்திரிக்கையாளர் பதிவிட்டுள்ளார்.
ஐந்து குழந்தைகள்
அவரது பதிவில் ஆப்கானிஸ்தான் தேசிய அணியின் கேப்டன் அஸ்கார் ஆப்கன் தன் வாழ்வில் இரண்டாவது முறையாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு முதல் மனைவி மூலம் ஐந்து குழந்தைகள் உள்ளது. இரண்டாம் இன்னிங்க்சிற்கு வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.
வாழ்த்து
அந்த பத்திரிக்கையாளர் விலாவாரியாக அஸ்கார் ஆப்கன் முதல் திருமணம் மற்றும் அவருக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து கூறியும் வருகின்றனர். அதில் ஒருவர் மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
மூன்றாவது இன்னிங்க்ஸ்
இது இரண்டாவது இன்னிங்க்ஸ் இல்லை. மூன்றாவது இன்னிங்க்ஸ் என கூறி உள்ளார். அப்படி என்றால் மூன்றாவது திருமணம் என்கிறாரா? என்பதும் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டில் இரண்டு திருமணம் செய்து கொள்வது சகஜம் தான் என சிலர் கூறி உள்ளனர்.
செயல்பாடு
2009இல் அறிமுகம் ஆன இவர் 111 ஒருநாள் போட்டிகளில் 2356 ரன்கள் குவித்துள்ளார். 69 டி20 போட்டிகளில் 1248 ரன்கள் குவித்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் 249 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டனாக பல முக்கிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.