Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கான் அணிக்கு ஏற்பட்ட அவமானம்.. லண்டன் விமான நிலையத்தில் நடந்த அவலம்.. ரஷித் கான் குற்றச்சாட்டு

லண்டன் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று நாடு திரும்பிய போது லண்டன் விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தான் அணி அவமானப் படுத்தப்பட்டுள்ளனர்.

உலக கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக கால் எடுத்து வைத்து அசுர வளர்ச்சி பெற்று உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், முஹம்மது நபி உள்ளிட்ட வீரர்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றனர்.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் தொடர்ந்து 2 போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இலங்கை,வங்கதேசம் என இரண்டு அணிகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆழ்த்தினர். ஆனால் சூப்பர் ஃபோர் சுற்றில் எதிர்பார்த்த வெற்றியை ஆப்கானிஸ்தான் அணியால் கொடுக்க முடியவில்லை.

காத்திருப்பு

காத்திருப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாக போராடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இந்த நிலையில் தங்களது சொந்த நாடு திரும்புவதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் லண்டன் வழியாக விமானத்தில் சென்றுள்ளனர். லண்டனில் உள்ள ஹெத்ரோ விமான நிலையத்தில் இமிகிரேஷன் பணிகளுக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சுமார் 4 மணி நேரம் வரிசையில் நிற்கவைக்கப்பட்டுள்ளனர்.

ரஷித் கான் கோரிக்கை

ரஷித் கான் கோரிக்கை

இமிகிரேஷன் அதிகாரிகள் தங்களை அதிக நேரம் காக்க வைத்ததாகவும் தங்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரஷித் கான், ஆப்கானிஸ்தான் அணியினர் சுமார் 4 மணி நேரம் வரிசையில் நிற்கவைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.இமிகிரேஷன் பகுதியில் வெறும் இரண்டு அதிகாரிகள் மட்டும்தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேண்டுமென்றே அவமானம்?

வேண்டுமென்றே அவமானம்?

ஏர்போர்ட் நிர்வாகம் கூடுதல் அதிகாரிகளை நியமித்து மக்களுக்கு எவ்வித தொந்தரவும் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் உடனடியாக இமிகிரேஷன் பணிகள் நடத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் வேண்டுமென்றே லண்டனில் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Story first published: Saturday, September 10, 2022, 23:55 [IST]
Other articles published on Sep 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+