Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்.. விவரம்

டெல்லி: ஆப்கானிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷப்பூர் சத்ரான் (38), அரிய வகை நோய் தாக்குதலால் டெல்லியில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இந்தத் தீவிர மற்றும் அபாயகரமான நோய்க்கு எதிராக அவர் உயிர்பிழைக்கப் போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் அவர் சிறப்பு மருத்துவ கவனிப்பைப் பெற்று வருகிறார்.

மருத்துவர்கள் இவருக்கு 'ஹெமோபாகோசைடிக் லிம்ஃபோஹிஸ் டியோசைடோசிஸ்’ (HLH) என்ற அரிய வகை நோய் எதிர்ப்பு குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த நோய் பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கிறது.

இது உடலின் நோய் எதிர்ப்புச் மண்டலத்தை கடுமையாகப் பாதித்து, அதீத நோய் எதிர்ப்புச் சக்தி எதிர்வினையால் தீவிர வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் எலும்பு மஜ்ஜை, கல்லீரல், மண்ணீரல் மற்றும் நிணநீர் கணுக்கள் போன்ற முக்கியமான திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேதமடையலாம்.

இது குறித்து பேசிய அவரது இளைய சகோதரர் கமாய் சத்ரான், கடந்த அக்டோபர் மாதம் ஷப்பூருக்குஉடல்நலக் குறைபாடுகள் ஏற்படத் தொடங்கின. இதனால் உயர் சிகிச்சைக்காக அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல ஆப்கானிஸ்தான் மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்தனர். “இது மிகவும் தீவிரமான தொற்று. அவரது உடல் முழுவதும் தொற்று பரவி இருந்தது, காசநோய் (TB) உட்பட. எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன்களுக்குப் பிறகு, மூளைக்கும் பரவியது தெரியவந்தது” என்று கமாய் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அவர் பெற்ற ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, ஷப்பூர் சத்ரான் மீண்டு வருவதற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டினார். இதனால் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். ஆனால், மூன்று வாரங்களுக்குள் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. “மருத்துவர் வழக்கமான பரிசோதனைகளுக்கு வரலாம் என்றார். ஷப்பூர் சுமார் 20 நாட்களுக்கு நன்றாக உணர்ந்தார், பின்னர் மீண்டும் தொற்று ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனையில் மீண்டும் சேர்த்தோம்” என்று கமாய் கூறினார்.

ஷப்பூர் சத்ரான் 2009 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 44 ஒருநாள் போட்டிகளிலும், 36 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சுத் தாக்குதலின் முக்கிய வீரராகக் கருதப்பட்ட அவர், தற்போது தனது வாழ்வில் மிகவும் சவாலான போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார். ஷப்பூருக்கு பல முன்னாள் வீரர்கள் பிராஙர்த்தனை செய்து வருகின்றனர்.

Story first published: Monday, April 20, 2026, 17:51 [IST]
Other articles published on Apr 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+