Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புலி போல் பதுங்கி பாய்ந்த ஆப்கானிஸ்தான்.. தடுமாறிய பாகிஸ்தான் பந்துவீச்சு.. மழை வந்து காப்பாற்றியது

பிரிஸ்பேன் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மோதிய பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முதுல் ஓவரை ஷாகின் ஆப்ரிடி வீசினார்.

அப்போது அனல் பறக்க அவர் வீசிய யாக்கர், ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாசின் காலை தாக்கியது. இதனையடுத்து அவர் டக் வுட் ஆனார்.

ஆப்கான் தடுமாற்றம்

ஆப்கான் தடுமாற்றம்

இதனைத் தொடர்ந்து ஹசருத்துலா ஷசாய் 9 ரன்கள் எடுத்திருந்த போது ஷாகின் ஆப்ரிடி கிளின் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து ரசூலி 3 ரன்களிலும், நஜிபுல்லா 6 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

பதிலடி தந்த ஆப்கான்

பதிலடி தந்த ஆப்கான்

இதனைத் தொடர்ந்து இப்ராஜிம் ஷர்டான் மற்றும் முகமது நபி ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இப்ராஹிம் ஷர்டான் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். மறுமுனையில், முகமது நபி பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தார். 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 51 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

ஆப்கான் 154 ரன்கள்

ஆப்கான் 154 ரன்கள்

இறுதியில் உஸ்மான் கனி 20 பந்துகளில் 32 ரன்களை விளாச, ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. முதலில் கட்டுக்கோப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர்கள், பிறகு ரன்களை வாரி குவித்தனர். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

மழையால் ஆட்டம் நிறுத்தம்

மழையால் ஆட்டம் நிறுத்தம்

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோரும் திணறினர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஓயிடு வீசியே 13 ரன்கள் கொடுத்தனர். பாபர் அசாம் 6 பந்துகளில் 6 ரன்களும், ரிஸ்வான் 8 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர். பாகிஸ்தான் அணி 2.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

Story first published: Wednesday, October 19, 2022, 21:46 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+