For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திறமை இருக்கு பாஸ்.. நிறையவே இருக்கு.. தூக்கி விட ஆள் வேணும்!

பெங்களூரு: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் பெரும் தோல்வியில் முடிந்திருக்கலாம். ஆனால் அதன் வருங்கால வெற்றிக் கோட்டைக்கான முதல் படிக்கல்லாக இந்த தோல்வியை அந்த அணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்மையிலேயே நல்ல திறமைகள் பல ஆப்கானிஸ்தானிடம் கொட்டிக் கிடக்கிறது. அந்த அணியின் முக்கியப் பிரச்சினையே கை தூக்கி விட ஆள் இல்லாமல் இருப்பதுதான்.

ஆப்கானிஸ்தான் தனது திறமையை சரிவர பயன்படுத்திக் கொண்டு, அதை மேம்படுத்தி மேலும் பொலிவோடு அடுத்தடுத்த போட்டிகளை சந்திக்க தயாராக வேண்டும். இதில்தான் அந்த அணிக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகிறது.

நல்ல பவுலர்கள்

நல்ல பவுலர்கள்

ஆப்கானிஸ்தானிடம் நல்ல பந்து வீச்சு திறமை உள்ளது. ஸ்பின்னர்கள் ரஷீத் கான், முஜீப் ஜத்ரான், வேகப் பந்து வீச்சாளர் வபாதர் ஆகியோரை குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக அச்சமின்றி இவர்கள் பந்து வீசினர்.

2வது நாளில் தடுமாற்றம்

2வது நாளில் தடுமாற்றம்

ஆனால் இதெல்லாம் முதல் நாளில்தான். 2வது நாளில் ஆப்கானிஸ்தான் ஆட்டம் கண்டு விட்டது. அவர்களது பேட்டிங் படு சொதப்பலாக இருந்தது. ஒரே நாளில் 2 முறை ஆல் அவுட் ஆனார்கள். மொத்தமே 66 ஓவர்கள்தான் அவர்களால் நிற்க முடிந்தது. அனுபவமின்மையே இதற்குக் காரணம்.

மிகக் குறுகிய டெஸ்ட்

மிகக் குறுகிய டெஸ்ட்

இந்தியத் துணைக் கண்டத்தில் நடந்து முடிந்த மிகக் குறுகிய டெஸ்ட் போட்டி இதுதான். 2 நாளிலேயே போட்டி முடிந்து போனது. ஒரே நாளில் 24 விக்கெட்கள் சாய்ந்தன. இதற்கு முன்பு இதுபோல 1902ல் நடந்துள்ளது. ஒரே நாளில் இருமுறை ஆல் அவுட் ஆன 4வது அணியாகவும் ஆப்கானிஸ்தான் உருவெடுத்தது.

சர்வதேச போட்டிகள்

சர்வதேச போட்டிகள்

அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் ஆடவுள்ளது. அயர்லாந்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடவுள்ளது. அதேபோல ஆஸ்திரேலியாவுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளது. இதேபோல இங்கிலாந்து, வங்கதேசத்துடனும் அது டெஸ்ட் ஆடவுள்ளது.

நீண்ட டெஸ்ட் தொடர்

நீண்ட டெஸ்ட் தொடர்

இருப்பினும் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வேவுடன் அது நீண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடவுள்ளது. அயர்லாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஜிம்பாப்வேவுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஆப்கானிஸ்தான் ஆடவுள்ளது.

நிறைய உதவிகள் தேவை

நிறைய உதவிகள் தேவை

இருப்பினும் ஆப்கானிஸ்தானுக்கு நிறைய உதவிகள் தேவைப்படும். கை தூக்கி விட அனைத்து கிரிக்கெட் ஆடும் நாடுகளும் உதவி செய்தால் நல்லது. நிறைய போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தால் அது நல்ல பயிற்சியாக அமையும். ஆப்கானிஸ்தானும் ஒரு சிறந்த அணியாக உருவெடுக்கும்.

Story first published: Saturday, June 16, 2018, 18:25 [IST]
Other articles published on Jun 16, 2018
English summary
Afghanistan will need more opportunities to horn their skills in the longer version of cricket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+