Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரங்கன் வாத்தியாராக மாறிய டிராட், பிராவோ.. தூக்கி கொண்டாடிய ஆப்கான் வீரர்கள்.. எப்படி நடந்தது மாற்றம்?

மும்பை : 2009 ஆம் ஆண்டு கிரிக்கெட் களத்திற்கு சாதாரண கற்றுக் குட்டி அணியாக வந்த ஆப்கானிஸ்தான் நடப்பு தொடரில் மட்டும் மிகப்பெரிய அணிகளை வீழ்த்தி தற்போது அரை இறுதி சுற்று வரை வந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியில் திறமை இருந்தாலும் வீரர்களுக்கு போதுமான அனுபவம் இல்லாமல் இருந்தது.

அவ்வளவு ஏன் அங்கு நடக்கும் உள்நாட்டு அரசியல், குழப்பம் போன்ற காரணங்களால் ஆப்கானிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில்தான் தங்களுடைய கிரிக்கெட் போட்டிகளை நடத்திக் கொண்டும் பயிற்சி செய்தும் வந்தனர்.

t20 world cup afg vs ban cricket

இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஜனார்த்தன் டிராட் மற்றும் பிராவோ ஆகியோர் இணைந்தனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜனார்த்தன் டிராட் வந்த பிறகு ஆப்கானிஸ்தான் அணி புத்துயிர் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி அப்படி எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் செய்யவில்லை.

இருக்கும் வீரர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை புகழும்போது ஸ்டெயின், ஒரு சூப்பரான கருத்தை கூறியிருந்தார். பெராரி கார் சிறப்பானது தான்.ஆனால் சாலை சரியில்லை என்றால் அது பயனை தராது. சாலைக்கு ஏற்ற டயர்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த கார் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதனை தான் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்கள் டிராட், பிராவோ செய்திருக்கிறார்கள் தங்களிடம் இருக்கும் வீரர்களை கள சூழலுக்கு ஏற்ப சரியான முறையில் பயன்படுத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கும் வீரர்கள் யாரும் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா போல் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் கிடையாது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் களத்திற்கு எந்த மாதிரி பந்து வீச வேண்டும் எந்த மாதிரி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப வீரர்களை தயார் படுத்தி இருக்கிறார்கள். இந்த பயிற்சியாளர் குழு ஆப்கானிஸ்தான் வீரர்கள் இயற்கையாகவே உடல் வலிமையை கொண்டவர்கள். இதனால் வேகப் பந்துவீச்சு என்பது அவர்களுக்கு ஒரு பெரிய சிக்கலே கிடையாது. ஆனால் வேகத்தை மட்டுமே நம்பினால் போதாது. விவேகமும் வேண்டும் என்பதை பந்துவீச்சு பயிற்சியாளராக வந்த பிராவோதான் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

எங்கு வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். எங்கு வேகத்தை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்பதை ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்ததன் விளைவாக தான் இந்த தொடரில் முக்கிய கட்டத்தில் பந்தின் வேகத்தை மாற்றி விக்கெட்டுகளை ஆப்கானிஸ்தான் வீரர்கள் எடுத்தார்கள். இதனால் தான் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அரையிறுதி சுற்றுக்கு சென்றவுடன் டிராட் மற்றும் பிராவோ ஆகியோரை தூக்கி கொண்டாடினர்.

ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றிப் பயணம் இத்துடன் முடியப்போவதில்லை. நாளை ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய அணியாக ஆப்கானிஸ்தான் உருவாக்கப் போகிறது. இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் மோதினாலும் யாரும் ஆச்சரியப்பட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 25, 2024, 11:59 [IST]
Other articles published on Jun 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+