Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆணவத்துல "ஆடுனா".. வெஸ்ட் இண்டீஸுக்கு ஆப்கானிஸ்தான் கொடுத்த ஆப்புதான் கிடைக்கும்!

நாக்பூர்: ஆப்கானிஸ்தான் இப்படி ஷாக் தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஓவர் கான்பிடன்ஸை அப்படியே அடித்து நொறுக்கிப் போட்டு விட்டனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.

நாம்தான் வெல்வோம், நம்மை விடவா ஆடி விடப் போகிறார்கள் என்ற அதீத நம்பிக்கையில், சற்றே ஆணவத்தில் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகளுக்கு நேற்றைய அடி அவ்வளவு சீக்கிரம் மறக்காது.

ஒரு டெஸ்ட் ஆடும் அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் அந்த அணிக்கு இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவாகும்.

ஆரம்பத்திலி்ருந்தே பிரமாதம்

ஆரம்பத்திலி்ருந்தே பிரமாதம்

ஆப்கானிஸ்தான் அணி இந்தத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ஆடி வந்தது. நேற்றைய போட்டிக்கு முன்பு அது ஆடிய 3 போட்டிகளிலுமே தோல்விதான் என்ற போதிலும் அது தனது போராட்டத்தை விட்டதே இல்லை.

தடாலடி ஆட்டம்

தடாலடி ஆட்டம்

நேற்றைய ஆட்டத்திலும் கூட மேற்கு இந்தியத் தீவுகள்தான் வெல்லும் என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதிரடியாக நிலைமையை தங்களுக்குச் சாதகமாக திருப்பி விட்டு விட்டனர்.

123 ரன்கள்

123 ரன்கள்

ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை எடுத்தது. அந்த அணியின் நஜிபுல்லா ஜர்தான் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 48 ரன்களைக் குவித்தார்.

அலட்சியமான ஆட்டம்

அலட்சியமான ஆட்டம்

மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்றைய போட்டியில் மிகவும் அலட்சியமாக ஆடியது போலவே தெரிந்தது. காரணம், எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கையே. ஆனால் அதை சிதறடித்து விட்டனர் ஆப்கானிஸ்தானியர்கள்.

சேஸிங்கில் சொதப்பல்

சேஸிங்கில் சொதப்பல்

மேற்கு இந்தியத் தீவுகள் அணி சேஸிங்கில் மிகவும் சொதப்பியது. ஓப்பனர் எவின் லூயிஸ் டக் அவுட் ஆனார். ஆஸ்திரேலியாவிந் 17 வயதேயான இளம் பந்து வீச்சாளர் ரஷீத் கான் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

கடைசி ஓவரில் கட்டையைக் கொடுத்த ஆப்கான்

கடைசி ஓவரில் கட்டையைக் கொடுத்த ஆப்கான்

மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. அந்த ஓவரில் பிராத்வெய்ட்டை 13 ரன்கள் இருந்தபோது, அபாரமாக கேட்ச் செய்து அவுட்டாக்கினார் நஜிபுல்லா. அது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குத் தோல்வியைக் கொடுத்து விட்டது.

117ல் சுருண்ட மேற்கு இந்தியத் தீவுகள்

117ல் சுருண்ட மேற்கு இந்தியத் தீவுகள்

3 பந்துகள் மீதமிருந்த நிலையில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மேற்கு இந்தியத் தீவுகள் அணி பரிதாபத் தோல்வியைத் தழுவியது.

முதலிடத்தில் மேற்கு இந்தியத் தீவுகள்

முதலிடத்தில் மேற்கு இந்தியத் தீவுகள்

இந்தப் போட்டியில் தோற்றாலும் கூட மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அரை இறுதியில் இந்தியாவை அது சந்திக்கிறது.

Story first published: Monday, March 28, 2016, 12:26 [IST]
Other articles published on Mar 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+