Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி.. 3 டி20 போட்டி நடத்த முடிவு.. ஆனால் டுவிஸ்ட்

டெல்லி: 2026 செப்டம்பரில், ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவை மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் சந்திக்கவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடரில் ஆப்கானிஸ்தான் "நடத்துவது" இதுவே முதல் முறை. இருப்பினும், அனைத்துப் போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என்பது தான் டிவிஸ்ட்.

இத்தொடர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், 2026 செப்டம்பர் 13, 16, 19 தேதிகளில் நடைபெறும். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முந்தைய இத்தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

"பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே நல்லுறவு நிலவுகிறது. அயர்லாந்து, இலங்கை, ஜிம்பாப்வே போன்ற வாரியங்களுக்கு, இந்திய அணிகளை அனுப்பி நிதி ரீதியாக பிசிசிஐ உதவி செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானுடனும் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. சில நடைமுறைகள் முடிந்தபின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்," என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்தது.

ஆப்கானிஸ்தான் தொடருக்கான 'போட்டிக்கு சொந்த மண்ணாக டெல்லியை பயன்படுத்த பிசிசிஐ மற்றும் டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் (டிடிசிஏ) இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதற்கேற்ப டிடிசிஏ தனது டெல்லி பிரீமியர் லீக் T20 தொடரையும் திட்டமிடுகிறது. செப்டம்பர் 23ல் துவங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட T20 அணியைத் தேர்வு செய்ய, இந்தியத் தேர்வுக் குழுவுக்கு போட்டி அட்டவணை பகிரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசியல் சூழல் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமே தாயகப் போட்டிகளை விளையாடி வருகிறது. முன்னதாக அயர்லாந்து மற்றும் டேராடூனிலும் சர்வதேச தொடர்களை நடத்தியுள்ளது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அணி இந்த மாதம் இந்தியாவுடன் ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது. முல்லன்பூர் புதிய பிசிஏ ஸ்டேடியத்தில் ஜூன் 6 முதல் 10 வரை டெஸ்ட் நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஜூன் 13, 17, 20 ஆகிய தேதிகளில் முறையே தர்மசாலா, லக்னோ, சென்னையில் ஒருநாள் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

இத்தொடர்களுக்கு சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் குர்னூர் ப்ரார் மற்றும் விதர்பாவின் ஹர்ஷ் தூபே ஆகிய இருவரும் முதல் முறையாக இரு வடிவப் போட்டிகளிலும் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Tuesday, June 2, 2026, 17:00 [IST]
Other articles published on Jun 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+