இன்று வங்கதேசத்துக்கு ஆட்டம் காட்டுமா ஆப்கானிஸ்தான்.. ஆசிய கோப்பை கடைசி லீக் போட்டி
அபுதாபி : ஆசிய கோப்பை போட்டிகளின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஏ பிரிவில் இருந்து இரண்டு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் இது ஒரு சம்பிரதாய ஆட்டமாகவே நடைபெறுகிறது. இந்த போட்டியின் முடிவு ஆசிய கோப்பை தொடரில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இரு அணிகளும் இதனை ஒரு பயிற்சி ஆட்டமாகவே கருதும்.

பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை அந்த அணியின் தமீம் இக்பால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது அவர்களுக்கு பெரும் இழப்பாகும். மேலும் நாளை மறுதினம் துபாயில் நடைபெறும் சூப்பர் 4 போட்டியில்,இந்திய அணியை எதிர்கொள்வதால் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இன்று அபுதாபியில் கடைசி லீக் போட்டியை முடித்து நாளை மீண்டும் இந்திய அணியுடன் துபாயில் விளையாட வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணி தமீம் இக்பாலுக்கு பதிலாக நஸ்முல் உசைன் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோருக்கும் இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்படலாம்.
ஆப்கானிஸ்தான் அணி தற்போது சிறந்த பார்மில் உள்ளது. இலங்கையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஆப்கான் அணி மிகுந்த நம்பிக்கையுடன் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆப்கான் அணியில் கேப்டன் அஸ்கர் ஆப்கான் மற்றும் முஹம்மது நபி ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.
இந்த அணிகள் வரும் ஞாயிற்றுகிழமை மீண்டும் சூப்பர் 4 போட்டியில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, September 20, 2018, 12:12 [IST]
Other articles published on Sep 20, 2018


Click it and Unblock the Notifications