Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

91 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக படுமோசமான ரெக்கார்டு.. கைவிடப்படும் டெஸ்ட்

நொய்டா: ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நொய்டா டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்ட நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டமும் கைவிடப்படது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டு இருக்கிறது.

இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை நடத்திக் கொள்ள பிசிசிஐ இடம் அனுமதி பெற்று இருந்த ஆப்கானிஸ்தான் அணி, நொய்டா மைதானத்தில் போட்டியை நடத்த முடிவு செய்தது. அங்கு நியூசிலாந்து அணி உடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோத இருந்தது. இந்த போட்டிக்கு முன்னதாக சில நாட்கள் நொய்டாவில் மழை பெய்தது. அதனால், மைதானத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருந்தது. இந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் சரியாக அமைக்கப்படாததால் போட்டியின் முதல் நாள் அன்று மழை பெய்யாத போதும் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை இருந்தது.

afghanistan new zealand bcci

ஏற்கனவே, மழை பெய்து தேங்கி இருந்த நீரை அங்கிருந்த ஊழியர்களால் வெளியேற்ற முடியவில்லை. அதே போல, முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் ஒரு சொட்டு மழை பெய்யாத போதும் கைவிடப்பட்டது. அதன் பின் மூன்றாவது நாள் மற்றும் நான்காவது நாளில் நொய்டாவில் மழை பெய்ததால் அந்த இரண்டு தினங்களிலும் போட்டி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில் மைதானத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கி இருந்தது. மேலும், போட்டி நேரத்திலும் மழை பெய்து கொண்டு இருந்தது. அதனால், எப்படியும் இந்த மைதானத்தை தயார் செய்ய முடியாது என்ற நிலையில் அம்பயர்கள் ஐந்தாம் நாள் ஆட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்தனர். இந்த மைதானத்தை தேர்வு செய்து டெஸ்ட் போட்டியில் ஆட முடிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி நொந்து போய் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை. இந்த நிலையில், தாங்கள் உருவாக்கிய இந்த அரிய வாய்ப்பும் பறிபோனதை எண்ணி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு சோகத்தில் உள்ளது.

91 வருட டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய மண்ணில் ஒரு போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்படப்பட்ட மோசமான சாதனையை செய்துள்ளது இந்தப் போட்டி. இதற்கு முன் ஏழு முறை மட்டுமே இதுபோல ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டு இருக்கின்றன. அந்த வரிசையில் எட்டாவதாக இந்த போட்டியும் இணைந்து உள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டிகள் விவரம் -

1. இங்கிலாந்து X ஆஸ்திரேலியா - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் - 1890

2. இங்கிலாந்து X ஆஸ்திரேலியா - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் - 1938

3. ஆஸ்திரேலியா X இங்கிலாந்து - மெல்போர்ன் - 1970

4. நியூசிலாந்து X பாகிஸ்தான் - காரிஸ்புரூக், டுனெடின் - 1989

5. வெஸ்ட் இண்டீஸ் X இங்கிலாந்து - போர்டா, கயானா - 1990

6. பாகிஸ்தான் X ஜிம்பாப்வே - இக்பால் ஸ்டேடியம், பைஸ்லாபாத் - 1998

7. நியூசிலாந்து X இந்தியா - கேரிஸ்புக், டுனெடின் - 1998

8. ஆப்கானிஸ்தான் X நியூசிலாந்து - நொய்டா - 2024

Story first published: Friday, September 13, 2024, 7:51 [IST]
Other articles published on Sep 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+