Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையை வெல்லுமாம்- ஆரூடம் கணித்த ரோபோட்

கான்டெர்பரி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஆரூடம் கணித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பெட்டிங்கில் யாரும் ஆப்கானிஸ்தானை எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆரூடத்தை கூறியுள்ளது.

'Afghanistan will win World Cup 2015'

நியூசிலாந்தின் கான்டெர்பரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் எடியூர்டோ சன்டோவல் உருவாக்கிய இந்த ரோபோட்டுக்கு இக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகள் குறித்து ஆரூடம் கணித்த பால் என்ற ஆக்டோபஸை உருவாக்கியவர் இக்ரம் என்பதால் அவரது பெயரையே தமது புதிய ஆரூட ரோபோட்டுக்கும் சூட்டியிருக்கிறார்.

சரி இந்த ரோபோட் என்ன முடிவை சொன்னது என்பதுதானே செய்தி...

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் என பல நாடுகளின் கொடிகளைப் பார்வையிட்டு வந்த ரோபோட் திடீரென ஆப்கானிஸ்தான் கொடியை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியம்தான்!

கிரிக்கெட் போட்டியில் கத்துக் குட்டி நாடாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையை வென்றுவிடும் எனில் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது..

அதே நேரத்தில் இன்று ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களிடம் சிக்கி இந்திய அணி வீரர்கள் தொடக்கத்தில் பட்டபாட்டை நினைத்துப் பார்த்தால் எல்லாமும் நடந்துவிடுமோ? என்றுதான் எண்ணத் தோன்றும்!!

Story first published: Friday, October 9, 2015, 17:07 [IST]
Other articles published on Oct 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+