Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி போட்டியில் கடைசிவரை மல்லுகட்டிய குட்டி அணிகள்.. ஐக்கிய அரபு எமிரேட்டை வீழ்த்திய ஆப்கன்!

மெல்போர்ன்: உலக கோப்பை பயிற்சி போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். கடைசிவரை பரபரப்பாக சென்றது இந்த போட்டி.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை துவங்குகிறது. இதற்கான கடைசி பயிற்சி போட்டி இன்று நடந்தது. ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.,) அணிக்கு எதிரான இப்போட்டியில் 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

Afghanistan won by 14 runs against U.A.E

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜாவேத் (12), உஸ்மான் (11) ரன்கள் எடுத்தனர். ஸ்டானிக்ஜாய் (33), கேப்டன் முகமது நபி (30), நஜிபுல்லா (46) ஆறுதலாக ரன் எடுக்க, ஷென்வாரி (58) அரைசதம் கடந்தார். 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்தது.

பெரிய இலக்கை விரட்டிய, யு.ஏ.இ. அணிக்கு குர்ரம் கான் கைகொடுத்து 86 ரன்கள் எடுத்தார். ஒருகட்டத்தில் 39.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது யூ.ஏ.இ. அதன்பின், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, 48.2 ஓவரில் 294 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Story first published: Friday, February 13, 2015, 14:15 [IST]
Other articles published on Feb 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+