Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் வென்ற ஆஃப்கான்.. நட்சத்திர வீரரை நீக்கிய இந்திய அணி.. தவறான முடிவை எடுத்தாரா ரோகித் சர்மா?

டெல்லி: இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் 9வது லீக் போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதனால் முதல் வெற்றியை பெற ஆஃப்கானிஸ்தான் அணியும், சொந்த மண்ணில் வெற்றிப் பயணத்தை தொடங்க இந்திய அணியும் வரிந்து கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Afghanistan Won the toss and chose bat against India in the World cup 2023

இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு, வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி மைதானத்தில் பவுண்டரி அளவு சிறியது என்பதால் கேப்டன் ரோகித் சர்மா சரியான முடிவை எடுத்துள்ளார்.

டாஸ் வென்ற பின் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகித் பேசுகையில், முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம். இது நல்ல பேட்டிங் பிட்சாக தெரிகிறது. எங்களிடம் இந்தியாவை கட்டுப்படுத்த நல்ல பவுலிங் அட்டாக் இருப்பதாக கருதுகிறேன். ஆனால் பேட்டிங்கில் நிச்சயம் நன்றாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. எங்களின் திறமையை வெளிப்படுத்த உலகக்கோப்பை தொடர் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் இரண்டாவது பேட்டிங் செய்யவே விரும்பினோம். நேற்றிரவு பயிற்சி மேற்கொண்ட போது பனிப்பொழிவு இருந்தது. இந்த பிட்சில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். சிறப்பாக பவுலிங் செய்துவிட்டு, சிறந்த பேட்டிங்கை இந்த போட்டியில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது பிரஷரில் இருந்தோம். ஆனால் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றிபெற வைத்தனர். அதேபோல் மீண்டும் வெற்றிபெற முயற்சிப்போம். இன்றையப் போட்டியில் அஸ்வினுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்திய பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ்

ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: குர்பாஸ், ஜத்ரான், ரஹ்மத் ஷா, ஷாகிதி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, ஒமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபரூக்கி

Story first published: Wednesday, October 11, 2023, 13:57 [IST]
Other articles published on Oct 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+