Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி அப்ரிதி புதிய சாதனை

டெல்லி: பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிதி டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் கண்டெடுத்த அபாரமான கிரிக்கெட் வீரர்களில் அப்திரிக்கு முக்கியத்துவம் உண்டு. எதிரணியினரும் மதிக்கக் கூடிய திறமையாளர் அப்ரிதி.

தற்போது தனது 86வது டுவென்டி 20 போட்டியில் அவர் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் டுவன்டி 20 போட்டிகளில் 86 விக்கெட்களைச் சாய்த்து டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள வீரராக உருவெடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி

துபாயில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டுவென்டி 20 போட்டியில்தான் இந்த சாதனையைப் படைத்தார் அப்ரிதி. அவரது சாதனைக்கு உதவிய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸ்.

அஜ்மலை முந்தினார்

அஜ்மலை முந்தினார்

இதுவரை 85 விக்கெட்டுகளுடன் இன்னொரு பாகிஸ்தான் வீரரான சயீத் அஜ்மல் முதலிடத்தில் இருந்து வந்தார். அவரை முந்தியுள்ளார் அப்ரிதி.

3வது இடத்திலும் பாகிஸ்தான்தான்

3வது இடத்திலும் பாகிஸ்தான்தான்

3வது அதிக விக்கெட் வீழ்த்திய வீரரும் பாகிஸ்தான் வீரர்தான். அவர் உமல் குல். இவர் 83 விக்கெட்களைச் சாய்த்து 3வது இடத்தில் நீடிக்கிறார்.

86 போட்டி 86 விக்கெட்

86 போட்டி 86 விக்கெட்

அப்ரிதி இதுவரை 86 டுவென்டி 20 போட்டிகளில் ஆடியுள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு ஒரு விக்கெட் என்ற வீதத்தில் 86 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.

Story first published: Saturday, November 28, 2015, 19:10 [IST]
Other articles published on Nov 28, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+