Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி இப்போது நம்பர் 1...!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பிரித்து மேய்ந்த விராத் கோஹ்லி இப்போது டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் மீண்டும் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது அபாரமான ஆட்டமே முதலிடத்தை அவர் மீண்டும் பிடிக்கக் காரணம்.

தற்போது ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச்சை பின்னுக்குத் தள்ளியுள்ளார் விராத் கோஹ்லி.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நான்கு போட்டிகளில் 184ரன்களைக் குவித்துள்ளார் கோஹ்லி. வியாழக்கிழமை மேற்கு இந்தியத் தீவுகளுடன் முக்கியமான அரை இறுதியில் இந்தியா மோதவுள்ளது.

தரவரிசையில் முதலிடம்

தரவரிசையில் முதலிடம்

இந்த நிலையில் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் கோஹ்லி. 2வது இடத்தில் ஆரோன் பின்ச் இருக்கிறார். 3வது இடம் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலுக்குக் கிடைத்துள்ளது.

கெய்ல் -6

கெய்ல் -6

பாப் டூபிளஸிஸ் 4வது இடத்திலும், அலெக்ஸ் ஹால்ஸ் 5வது இடத்திலும் உள்ளனர். கிறிஸ் கெய்ல்6வது இடத்தில் இருக்கிறார். கனே வில்லியம்சன் 7, ஹாமில்டன் மசகஸ்தா 8, முகம்மது சஷாத் 9, ஷான் வாட்சன் 10வது இடத்தில் உள்ளனர்.

பந்து வீச்சில் அஸ்வின் 3

பந்து வீச்சில் அஸ்வின் 3

டி20 பந்து வீச்சாளர்களில் மேற்கு இந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரீ முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடத்தில் இம்ரான் தாஹிர், 3வது இடத்தில் அஸ்வின் உள்ளனர். 4வது இடம் ஷாஹித் அப்ரிதிக்குக் கிடைத்துள்ளது. 5வது இடத்தில் கைல் அப்பாட் உள்ளார்.

Story first published: Tuesday, March 29, 2016, 17:21 [IST]
Other articles published on Mar 29, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+