Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 பவுண்டரி, 5 சிக்ஸ்.. 64 பந்துகளில் 132 ரன்கள்.. வெஸ்ட் இண்டீஸ்-னாலே இப்படிதானோ.. வரலாற்று வெற்றி!

சிட்னி: சர்வதேச டி20 போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

After a Fantastic Century from Hayley Mathews, West Indies chase down 213 runs against Australia in Sydney

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பெத் மூனி 22 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இணைந்த எல்லீஸ் பெர்ரி - லிட்ச்ஃபீல்ட் கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கியது. சிறப்பாக ஆடிய லிட்ச்ஃபீல்ட் 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

அதேபோல் நட்சத்திர வீராங்கனை எல்லீஸ் பெர்ரி 46 பந்துகளுக்கு 70 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. மகளிர் கிரிக்கெட் டி20 வரலாற்றில் 200 ரன்களுக்கு மேல் எந்த அணியும் சேஸ் செய்ததாக வரலாறு இல்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடையும் என்றே பார்க்கப்பட்டது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் - ஸ்டஃபானி டெய்லர் இணை ஆஸ்திரேலிய அணியின் பவுலர்களை மிரட்டிவிட்டனர். அதிலும் ஹேலி மேத்யூஸ் ஆடுவதை பார்க்கும் போது கிறிஸ் கெய்ல் ஆட்டத்தை நினைவுப்படுத்தியது. 26 பந்துகளில் அரைசதம் அடித்த ஹேலி மேத்யூஸ், 53 பந்துகளில் சதத்தை கடந்தார். ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்சர் என்று வெளுத்து கட்டினார். ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பந்தை வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாக மாறியது.

இறுதியாக மேத்யூஸ் 64 பந்துகளில் 20 பவுண்டரி, 5 சிக்ஸ் உட்பட 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி புதிய சரித்திரம் படைத்தது. டி20 கிரிக்கெட்டில் வலுவான அணியாக உள்ள ஆஸ்திரேலியாவை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, October 2, 2023, 18:53 [IST]
Other articles published on Oct 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+