Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு பின் யாருமே கிடையாது.. இந்திய வீரருக்கு வார்னிங் கொடுத்த பிசிசிஐ.. எதிர்காலம் என்ன ஆகுமோ?!

Recommended Video

Rishabh pant| கேப்டன் கோலி! தயவுசெய்து ரிஷப் பண்ட் இடத்தை மாத்துங்க!

டெல்லி: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவருக்கு பிசிசிஐ தேர்வுக்குழு வார்னிங் அளித்துள்ளது.

உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்திய அணி செமி பைனலில் தோல்வி அடைந்து வெளியேறியது. தொடர் முழுக்க சிறப்பாக விளையாடினாலும் கடைசி போட்டியில் இந்தியா மோசமாக ஆடி தோல்வியை தழுவியது.

இந்த உலகக் கோப்பை தொடரில் கடைசி கட்டத்தில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டவர்தான் ரிஷாப் பண்ட். தவான் காயம் அடைந்ததை அடுத்து இவர் அணிக்குள் வந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அந்த உலகக் கோப்பை தொடரில் இவர் சரியாக ஆடவில்லை. அந்த தொடர் முழுக்க இவர் மோசமான ஷாட்களை ஆடி அவுட்டானார். அதேபோல் அவரின் பொறுப்பற்ற ஆட்டம் மற்றும் கீப்பிங் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

என்ன மோசம்

என்ன மோசம்

அதேபோல்தான் இந்தியா ஆடிய மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சரியாக ஆடவில்லை. தொடர் முழுக்க தேவையில்லாத ஷாட்களை ஆடி வெறுப்பேற்றினார். மிக முக்கியமாக அவர் தேவைப்படும் நேரங்களில் கூட சரியாக ஆடவில்லை.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் அவர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். தோனிக்கு பின் மாற்றாக ரிஷாப் பண்ட் இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் தோனி போய்விட்டால் அவ்வளவுதான். தோனிக்கு இந்திய அணியில் சிறந்த மாற்று கிடையாது என்பது நிரூபணம் ஆகியுள்ளது என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கி உள்ளனர்.

பிசிசிஐ கோபம்

பிசிசிஐ கோபம்

அதேபோல் பிசிசிஐ அமைப்பின் தேர்வுக் குழுவும் ரிஷாப் பண்ட் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. உங்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தோம். நிறைய சலுகைகள் கொடுத்தோம். கூடுதல் பயிற்சியும் கொடுத்தோம் ஆனாலும், உங்கள் விளையாட்டில் முன்னேற்றம் இல்லை என்று ரிஷாப் பண்டிடம் பிசிசிஐ அமைப்பு கூறியுள்ளது.

வாய்ப்பு என்ன

வாய்ப்பு என்ன

இதனால் இந்திய அணியில் ரிஷாப் பண்டிற்கு பதிலாக பெரும்பாலும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். கேரளாவை சேர்ந்தஹ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் பல வருடங்களாக இந்திய அணியில் நுழைய காத்துக் கொண்டு இருக்கிறார். இவர் பெரும்பாலும் அணிக்குள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Tuesday, September 24, 2019, 17:09 [IST]
Other articles published on Sep 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+