
நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் மே 3-ந் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் இடையிலான ஆட்டத்தின் போது டெல்லி கேப்டன் கெவின் பீட்டர்சனுக்கு ரன்-அவுட் கேட்டு அப்பீல் செய்யப்பட்டது.
ஆனால் மூன்றாவது நடுவரின் ஆலோசனை பெறாமலேயே வீரர்களின் அப்பீலை நடுவர் சஞ்சய் ஹசாரே நிராகரித்தார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பீட்டர்சன் ரன்-அவுட் ஆகியிருப்பது தெளிவாக தெரிந்தது.
இந்த தவறுக்காக அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.