Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னரை தொடர்ந்து டிக்டாக்கில் குதித்த பிராவோ.. புஷ்பா பாடலுக்கு போட்ட ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ

சென்னை: டேவிட் வார்னரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ டிக்டாக்கில் சேட்டையை தொடங்கியுள்ளார்.

Recommended Video

DJ Bravo Performs Srivalli Steps -Pushpa Walk in BPL 2022 | OneIndia Tamil

சமீப காலமாக கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அதில் டேவிட் வார்னர் முக்கியமானவர்.

தென்னந்திய திரைப்பட பாடல்கள், காட்சிகள் ஆகியவற்றிற்கு நடித்து, அதனை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிடுவார்.

பிராவோ டிக்டாக்

இந்நிலையில் சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோவும் இதில் குதித்துள்ளார். புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "ஸ்ரீவல்லி" பாடலுக்கு அவர் டிக் டாக் செய்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுனை போலவே நடனமாடியுள்ள பிராவோ, காலணிகள் தடுக்கி விடுவது போன்றும் செய்துக்காட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

கவனம் ஈர்த்த கேப்டன்

இந்த வீடியோவின் கேப்சனில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மற்றும் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவைன் டேக் செய்துள்ள பிராவோ, நான் எப்படி நடனமாடினேன் எனக்குறிப்பிட்டுள்ளார். இதற்கு உடனடியாக பதில் கொடுத்த வார்னர், நீங்கள் தான் 'லெஜெண்ட்' சகோதரரே என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இந்திய வீரர்கள்

"வாத்தி கம்மிங்" பாடலுக்கு அடுத்தபடியாக "ஸ்ரீ வல்லி" பாடலின் நடனத்திற்கும் பல பிரபலங்கள் டிக் டாக் செய்து வருகின்றனர். ஏற்கனவே டேவிட் வார்னர் தனது பணியை முடித்துவிட்டார். இதே போல இந்திய வீரர்கள் சுரேஷ் ரெய்னா, கலீல் அகமது போன்றோர் அப்பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஜடேஜாவின் முயற்சி

ஜடேஜாவின் முயற்சி

இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேல் சென்ற ரவீந்திர ஜடேஜா புஷ்பா திரைப்படத்தில் வரும் அல்லு அர்ஜுனை போன்றே தனது கெட்டப்பை மாற்றி வசனத்தையும் பேசி அசத்தினார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளங்களில் ஜாலியாக இருக்கும் இந்த வீரர்கள், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தை எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 25, 2022, 19:57 [IST]
Other articles published on Jan 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+