39 பந்தில் 63 ரன்.. யாருன்னு தெரியுதா? தடையை தாண்டி வந்த பிரித்வி ஷா அதிரடி ஆட்டம்!
Recommended Video
மும்பை : ஊக்கமருந்து சோதனையில் சிக்கி கடந்த 8 மாதங்கள் தடை பெற்ற இளம் ஆட்டக்காரர் பிரித்வி ஷா, தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை துவக்கியுள்ளார்.
8 மாதகால தடைக்கு பிறகு சையத் முஸ்தக் அலி கோப்பை தொடருக்காக மும்பை அணி சார்பில் களமிறங்கியுள்ள அவர் தனது முதல் ஆட்டத்திலேயே 39 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் சிறப்பான தனது ஆட்டத்தை துவங்கி பல்வேறு தரப்பினர் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கைகுரிய இளம் நட்சத்திரமாக விளங்கிய பிரித்வி ஷா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 8 மாதங்கள் தடை பெற்றிருந்தார்.

ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம்
கடந்த ஆண்டில் ராஜ்கோட்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கிய ஆட்டத்தில் 134 ரன்களை குவித்து, தன்னுடைய முதல் போட்டியிலேயே ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறினார் பிரித்வி ஷா.

கணுக்காலில் காயம்
தொடர்ந்து பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடி 70 மற்றும் 33 ரன்கள் நாட் அவுட் என்று அடித்த நிலையில், கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.

16 போட்டிகளில் 353 ரன்கள்
இதனிடையே இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி 16 போட்டிகளில் 353 ரன்களை குவித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

8 மாதங்கள் தடை
இதனிடையே பிரித்விக்கு மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததையொட்டி அவர் கிரிக்கெட் விளையாட எட்டு மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது. மார்ச் 16ம் தேதி முதல் நவம்பர் 15 வரை அவருக்கு தடைவிதிக்கப்பட்டது.

மீண்டும் களமிறங்கிய பிரித்வி
இந்நிலையில் நவம்பர் 15ந்துடன் அவரது தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் தற்போது அவர் சையத் முஸ்தக் அலி கோப்பை தொடரில் மும்பை அணி சார்பில் அசாமிற்கு எதிராக களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் தற்போது 2 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் அவர் 39 பந்துகளில் 63 ரன்களை அடித்துள்ளார்.

அரை சதத்தால் மகிழ்ச்சி
போட்டியில் 32 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை நிறைவு செய்த பிரித்வி ஷா, இதையடுத்து தனது பேட்டை உயர்த்தி பிடித்து தன்னுடைய சந்தோஷத்தை தெரிவித்துக் கொண்டார்.

தேர்வு குழு கண்காணிப்பு
இதனிடையே பிரித்வி ஷா இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என்பதை அவரது தடைக்கு பிறகான தொடர் ஆட்டங்களே தீர்மானிக்கும் என்று இந்தியாவின் புதிய பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications