டோணிக்காக காத்திருக்கிறேன்... மனைவி சாக்ஷி
ராஞ்சி: எனது கணவரை மீண்டும் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி டோணி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகி விட்டது டோணி, தனது மனைவி சாக்ஷியை விட்டு ஆஸ்திரேலியா சென்று. தனது மனைவிக்கு நடந்த பிரசவத்தின்போதும் கூட டோணி அருகில் இல்லை. தனது மகள் பிறந்தபோதும் கூட அவர் வந்து பார்க்கவில்லை.
இந்த நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது. அரை இறுதிப் போட்டியில் டோணியின் தீரமான போராட்டத்துடன் இந்தியாவின் வேட்டை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் டோணியின் வருகையை எதிர்நோக்கியிருப்பதாக அவரது மனைவி சாக்ஷி டிவிட்டரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில்,
கடுமையாக போராடினீர்கள்.. நமது அணிக்காக பெருமைப்படுகிறேன். சிலவற்றில் வெல்லலாம், சிலவற்றை இழக்கலாம். ஆனால் செய்த தியாகங்கள் மதிப்புக்குரியவை. இறுதியாக எனது கணவரைக் காணப் போகிறேன் என்று கூறியுள்ளார் சாக்ஷி.
சாக்ஷி மட்டுமா, அந்த குட்டிப் பாப்பாவும் கூடத்தான் தனது தந்தையைப் பார்க்க ஆவலாக காத்திருக்கும்.. சீக்கிரம் ஓடியாங்க டோணி.


Click it and Unblock the Notifications