Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திறமை இருந்தும் கைவிட்ட ஐபிஎல் அணிகள்.. நெசவு செய்யும் தமிழக கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சி தகவல்!

Recommended Video

Ganeshan Periyaswamy unsold in IPL 2020, doing native business now

சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் ஜி பெரியசாமி 2019 டிஎன்பிஎல் தொடரில் வேகப்பந்துவீச்சில் விக்கெட் வேட்டை நடத்தி தன் திறமையைக் காட்டி பெரும் புகழ் பெற்றார். தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

அடுத்த கட்டமாக, ஐபிஎல் அணிகள் 2020 ஐபிஎல் ஏலத்தில் தன்னை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார் பெரியசாமி.

எனினும், அந்த அணியும் அவரை ஏலத்தில் வாங்கவில்லை. இதையடுத்து அவர் விசைத்தறியில் நெசவு செய்து வருகிறார். திறமையான வீரருக்கு நேர்ந்த இந்த கதி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

லசித் மலிங்கா போன்ற பந்துவீச்சு

லசித் மலிங்கா போன்ற பந்துவீச்சு

2019 டிஎன்பிஎல் தொடரில் தான் பெரியசாமி பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். லசித் மலிங்காவின் பந்துவீச்சை அப்படியே பின் பற்றும் அவர், யார்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணற வைத்தார்.

இறுதிப் போட்டி கலக்கல்

இறுதிப் போட்டி கலக்கல்

அவர் வலது கண்ணில் பார்வைக் குறைபாடு இருக்கிறது. அதை சமாளித்து தான் அவர் கிரிக்கெட்டில் சாதித்து வருகிறார். டிஎன்பிஎல் தொடர் முழுவதும் தன் முத்திரையை பதித்த அவர் இறுதிப் போட்டியிலும் கலக்கினார்.

5 விக்கெட்கள்

5 விக்கெட்கள்

சேப்பாக் கில்லீஸ் அணிக்காக ஆடிய அவர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

முதல் இடம்

முதல் இடம்

2019 டிஎன்பிஎல் தொடரில் 21 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களில் முதல் இடம் பிடித்தார். அந்த தொடரின் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் அவர் தான் வென்றார்,

நல்ல சராசரி

நல்ல சராசரி

அடுத்து இந்திய அளவிலான சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் 8 போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்தினார். இரண்டு போட்டிகள் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவரது பந்துவீச்சு சராசரியும் சிறப்பாக இருந்தது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்த நிலையில், அவரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாவது வாங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அது ஏமாற்றமாக இருந்தது.

சாய் கிஷோர்

சாய் கிஷோர்

தமிழக அளவில் ஆடி வரும் வீரர்களில் சுழற் பந்துவீச்சாளர் ஆர் சாய் கிஷோர் மட்டுமே ஏலத்தில் வாங்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்து இருந்தது.

விசைத்தறி தொழில்

விசைத்தறி தொழில்

இந்த நிலையில், பெரியசாமி தன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் தேசவிளக்கு கிராமத்தில் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார். இடையிடையே கிரிக்கெட் பயற்சியையும் தொடர்ந்து வருகிறார்.

Story first published: Monday, December 30, 2019, 16:01 [IST]
Other articles published on Dec 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+