Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற லெவல், வேற லெவல்.. கோலியை பார்த்து திக்கி திக்கி அழகாக தமிழில் பேசிய பண்ட்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கீப்பர் பண்ட் தமிழில் பேசியது வைரலாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடிய இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

எப்படி

எப்படி

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி தமிழில் பேசினார். அஸ்வின் பவுலிங் போடும் போது சில தமிழ் வார்த்தைகளை பேசினார். நல்லா இருக்கு அஸ்வின் என்று சில முறை குறிப்பிட்டார்.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வின் அப்படியே போடு என்றும் ஒருமுறை கோலி குறிப்பிட்டார்.கோலி இப்படி திடீர் என்று தமிழில் பேசியது பெரிய அளவில் வைரலாகியது. இது தொடர்பாக வீடியோக்கள் கூட இணையத்தில் பெரிய அளவில் வைரலானது.

தமிழ்

இந்த நிலையில் தற்போது இந்திய வீரர் பண்டும் தமிழில் பேசுவதற்கு முயன்று இருக்கிறார். இன்றைய போட்டியின் போது அஸ்வின் பவுலிங் செய்த போது கோலி அஸ்வினை வேற லெவல் என்று பாராட்டினார். இந்த நிலையில் பண்டும் இதை திருப்பி சொன்னார்.

கோலி பேச்சு

கோலி பேச்சு

கோலி சொன்னதை கேட்டுக்கொண்டு பண்டும் வேற லெவல் வேற லெவல் என்றார். ஆனால் அவரால் வேற லெவல் என்று சரியாக சொல்ல முடியவில்லை. அவர் பேசிய தமிழ் மழலை பேசுவது போல மிகவும் அழகாக இருந்தது.

வைரல்

வைரல்

இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்திய அணியில் தமிழகத்தை சேராத சில வீரர்கள் இப்போது தமிழ் பேச தொடங்கி உள்ளனர். ஷமி, விஹாரி, ராகுல் , மயங்க், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தமிழில் பேச தொடங்கி உள்ளனர். அதில் பண்ட், கோலியும் இணைந்துள்ளனர்.

Story first published: Tuesday, February 16, 2021, 16:57 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+