Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஷசாங்க் மனோகர், ஐசிசி தலைவராக ஒரு மனதாக தேர்வு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஷசாங்க் மனோகர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2008-11 கால கட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்தவர் ஷசாங்க் மனோகர். இதனிடையே, பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வந்த, ஜக்மோகன் டால்மியா மறைந்ததை தொடர்ந்து, கடந்த வரும் அக்டோபரில், ஷசாங்க் மீண்டும் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதேநேரம், ஐசிசியிலும் இவர் தலைவராக பதவியில் இருந்தார்.

After quitting BCCI, Shashank Manohar elected unopposed as independent ICC Chairman

ஐசிசியின் புதிய விதிமுறைப்படி, அதன் தலைவராக பதவி வகிப்பவர் வேறு எந்த கிரிக்கெட் சங்கத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது. இந்த விதிமுறையை தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை, பிசிசிஐ தலைவர் பதவியை ஷசாங்க் ராஜினாமா செய்தார்.

சம்பிரதாயமாக, ஐசிசி தலைவர் பதவியையும் அன்றே ராஜினாமா செய்தார். இந்நிலையில், துபாயில் இன்று நடைபெற்ற ஐசிசி நிர்வாக கூட்டத்தில், ஷசாங்க் மனோகர் ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

Story first published: Thursday, May 12, 2016, 11:59 [IST]
Other articles published on May 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+