Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிவெடுக்க இன்னும் 3 மாதங்கள்.. வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் தல தோனி.. ஏன் தெரியுமா?

ராஞ்சி: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நாள் முழுக்க ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வருவதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக 5வது முறையாக வென்று கொடுத்தார் தோனி. சென்னை அணியை கடைசி பந்தில் வெற்றிபெற வைத்த ஜடேஜாவை தூக்கி வைத்து கொண்டாடியதோடு, ஆனந்த கண்ணீரையும் வெளிப்படுத்தினார் தோனி. 41 வயதிலும் தோனி கிரிக்கெட் களத்தில் சிங்கமாய் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

After the knee Surgery, MS Dhoni is spending more time in Gym to get back the Fitness for IPL 2024

அதுமட்டுமல்லாமல் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் தோனி ஐபிஎல் தொடருக்கு வந்ததே ரசிகர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஐபிஎல் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி தொடர்ந்து அவதிபட்டார். இதனால் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின், உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதன்பின் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்த தோனி, தனது தயாரிப்பில் உருவான படத்திற்கான சில விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். ஆனால் அப்போதும் தோனி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. அதனை தோனியின் மனைவி சாக்‌ஷி உறுதிபடுத்தினார்.

After the knee Surgery, MS Dhoni is spending more time in Gym to get back the Fitness for IPL 2024

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தோனி தனது நண்பர்களுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. புதிய ஹேர் ஸ்டைலுடன் காணப்படும் தோனி, முழு நேரமும் ஜிம்மிலேயே ஒர்க் அவுட் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் வகையில், 3 மாதங்களுக்கு பிறகும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

தோனியின் தீவிர ஒர்க் அவுட்டிற்கு பின் என்ன காரணம் என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பி இருந்தனர். தற்போது தோனியின் ஒர்க் அவுட்டிற்கான காரணம் தெரிய வந்துள்ளது. ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான மினி ஏலத்திற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது. அந்த 3 மாதங்களுக்குள் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஃபிட்னஸை எட்டுவதற்காக தோனி ஒர்க் அவுட்டை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக தோனி அடுத்த சீசனுக்கான பயிற்சியை தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Story first published: Sunday, August 27, 2023, 14:17 [IST]
Other articles published on Aug 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+