Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு.. புது காதலியுடன் கிரீஸ் நாட்டில் ஹர்திக்.. இன்ஸ்டாகிராமால் வெளிவந்த உண்மை

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருடன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அவர் விடுமுறை கொண்டாட கிரீஸ் நாட்டிற்கு பயணித்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த மாதத்தில் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகினார்.

இதன்பின் செர்பியாவைச் சேர்ந்த மாடலான நடாஷா ஸ்டான்கோவிக் தனது மகனுடன் நாடு திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் நடாஷா மற்றும் அவரது மகன் செர்பியா புறப்படும் வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்டாகின. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா புதிய காதலியுடன் நேரம் செலவிட்டு வருவது தெரிய வந்துள்ளது.

ipl 2025 Hardik Pandya

கிரீஸ் நாட்டில் விடுமுறையை செலவிட்டு வரும் ஹர்திக் பாண்டியா, தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்திற்கு முன் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதேபோல் பிரிட்டனைச் சேர்ந்த பாடகியான ஜாஸ்மின் வாலியாவும் அதே நீச்சல் குளம் முன் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரே நீச்சல் குளம் முன்பு புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஜாஸ்மின் வாலியாவின் அந்த புகைப்படத்தை மட்டும் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் லைக் செய்யவில்லை. ஆனால் ஜாஸ்மின் வாலியாவின் மற்ற அனைத்து புகைப்படங்களையும் ஹர்திக் பாண்டியா லைக் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த ரசிகர்கள் பலரும் ஜாஸ்மின் வாலியாவின் புகைப்படத்திற்கு கீழே சென்று, ஹர்திக் பாண்டியாவும் நீங்களும் காதலில் இருக்கிறீர்களா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதன் மூலமாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புதிதாக காதல் உறவில் இணைந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

நடாஷா உடனான உறவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி ஒரு மாதம் கூட முழுமையாக முடிவடையாத சூழலில், ஹர்திக் பாண்டியா அடுத்த காதலில் விழுந்திருப்பது ரசிகர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹர்திக் - நடாஷா பிரிவுக்கான காரணம் என்ன என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.

Story first published: Wednesday, August 14, 2024, 8:53 [IST]
Other articles published on Aug 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+