For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஃப்கானை கைப்பற்றும் தாலிபான்கள்.. ஐபிஎல் முதல் உலகக்கோப்பை வரை.. கிரிக்கெட் எதிர்காலம் என்ன?

சென்னை: ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் நடந்து வருவதால், ஐபிஎல், டி20 உலகக்கோப்பை தொடர் என பல முக்கிய கிரிக்கெட் தொடர்களில் அந்நாட்டு வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Recommended Video

Rashid Khan Worried, Can't Get His Family Out Of Afghanistan -Kevin Pietersen | Oneindia Tamil

அமெரிக்க படைகள் ஆஃப்கானில் இருந்து வெளியேறியதில் இருந்து, ஆஃப்கானிஸ்தானை கைப்பற்ற தாலிபான்கள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பூதாகரமாக வெடித்த உள்நாட்டு போரில் பல மாகாணங்களை தாலிபான்கள் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அவர்கள் இன்று ஆஃப்கானின் தலைநகர் காபூலை சுற்றி வளைத்தனர். ராணுவ தாக்குதல் மூலம் காபூலுக்குள் நுழைய விரும்பவில்லை என்று தெரிவித்த தாலிபான் அமைப்பினர், நகருக்கு வெளியிலேயே காத்திருந்தனர்.

தாலிபான் அமைப்பு

தாலிபான் அமைப்பு

அனைத்து இடங்களிலும், தாலிபான் படைகளிடம், அந்நாட்டின் ராணுவப்படை வீழ்ந்து வருகிறது. இதனால் காபூலிலும் மிகப்பெரிய போரினை நடத்தி கைப்பற்றிவிடுவார்கள் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் மோதலை தவிர்க்க அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். துணை அதிபர் சலேவும் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருத்தரப்புக்கும் சுமூகமான முடிவுகளை தருவதற்காக இடைக்கால அதிபராக முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இடைக்கால அரசு என்னும் யோசனையை தாலிபான்கள் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

 ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தான்

இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் நிலை, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக ஆஃப்கானிஸ்தான் அணியும் டாப் 10 இடங்களை பிடித்து வருகிறது. குறிப்பாக டி20 போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த சூழலில் அந்த அணியினர் தற்போது எங்கு உள்ளனர், அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் எங்குள்ளனர் என்ற கேள்விகள் உலா வந்துக் கொண்டிருக்கின்றன.

அணி வீரர்களின் நிலை என்ன?

அணி வீரர்களின் நிலை என்ன?

ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயார் ஆகி வந்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று தோல்வியை தழுவியது. அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இணைந்து மும்முணை போட்டியில் கலந்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. பிரிட்டனில் 'தி ஹண்ட்ரெட் ' எனும் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் ரஷீத் கான் டிரன்ட் ராக்கெட்ஸ் அணிக்காகவும், முகமது நபி லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்

போட்டிகள் கேள்விக்குறி

போட்டிகள் கேள்விக்குறி

இந்நிலையில் தற்போது தாலிபான்களின் தாக்குதல் உள்ளதால் ஆஃப்கானிஸ்தானின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு அடுத்ததாக டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர், என பல்வேறு போட்டிகள் வரிசையாக உள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது சந்தேகத்தில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஃப்கானின் உள்நாட்டு தொடரான ஸ்பாகீசா கிரிக்கெட் தொடரும் திட்டமிடப்பட்டது.

அதிகாரி விளக்கம்

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து பேசியுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், ஆஃப்கானில் நிலவி வரும் பிரச்னை கிரிக்கெட் அணியை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஐசிசி-யிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். போட்டிகளில் பங்கேற்க முடிந்த வரை போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, August 16, 2021, 16:08 [IST]
Other articles published on Aug 16, 2021
English summary
With the ongoing civil war in Afghanistan, the participation of players in many important cricket series such as the IPL and the T20 World Cup has been called into question.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+