Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய அந்த பிரபல ராஜஸ்தான் வீரர்... ரசிகர்கள் ஆச்சர்யம்

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்ற பிறகு தல தோனியிடம், பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆட்டோகிராப் வாங்கியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த சென்னை அணி, கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது. அரைசதம் கடந்த தோனி, கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி, அணியின் ஸ்கோர் உயர காரணமாக அமைந்தார்.

ராஜஸ்தான் தடுமாற்றம்

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி ஆட்ட நாயகன்

46 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய தல தோனி ஆட்டநாயகன் விருதை பெற்றார். போட்டிக்கு பிறகு, சென்னை, ராஜஸ்தான் வீரர்கள் ஜாலியாக பேசி கொண்டிருந்தனர். அதேபோல், அந்த அணியில் இருக்கும் 17 வயதேயான இளம் வீரர் ரியான் பாராக், தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தோனி ஆட்டோகிராப்

தோனி ஆட்டோகிராப்

அப்போது, ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம், தோனியிடம் தமது பேட்டில் ஆட்டோகிராப் வாங்கினார். கிரிக்கெட் வீரர் ஒருவரே தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய சம்பவம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

கிரிக்கெட் உலகை பொறுத்தவரை... ஆட்டோகிராப் போடுவதில் தோனி என்றுமே தனி ரகம் தான். ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போடும் போதும் சரி... அவர்களுடன் ஜாலியாக மைதானத்தில் ஓடி பிடித்து விளையாடிய சம்பவங்களும் சரி... மறக்க முடியாத ஒன்று என சொல்லலாம்.

Story first published: Monday, April 1, 2019, 14:09 [IST]
Other articles published on Apr 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+