Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க ரொம்ப நல்லவர்தான்.. நம்பிட்டேன்! போட்டியில் நடந்த அந்த சம்பவம்.. செம கடுப்பான வார்னர்!

பெர்த் : ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கிடையில் பெர்த்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ பர்ன்ஸை நோக்கி எதிரணிபவுலர் டிம் சவுதி வீசிய பந்தை அடுத்து டேவிட் வார்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஜோ பர்ன்ஸ் கிரீசிலிருந்து வெளியில் வந்ததால் தான் அந்தப் பந்தை தான் வீசியதாக டிம் சவுதி கூறிய நிலையில், பந்து ஜோ பர்ன்சின் கைகளை பதம் பார்த்ததை குறிப்பிட்டு டேவிட் வார்னர் கோபமடைந்தார்.

டிம் சவுதியுடனான டேவிர் வார்னரின் வாக்குவாதம் நீடித்த நிலையில், நீங்கள் மிகவும் நல்லவர்தான் என்று டேவிட் வார்னர் அவரை கலாய்த்தார்.

 முதல் போட்டி துவக்கம்

முதல் போட்டி துவக்கம்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

 ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக அஸ்திரேலியா முதலில் தனது பேட்டிங்கை துவங்கியது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் விளையாடியபோது நியூசிலாந்து வீரர் டிம் சவுதியின் செயல் டேவிட் வார்னரை கடுப்பேற்றியது.

 தேவையில்லாத த்ரோ வீசிய டிம் சவுதி

தேவையில்லாத த்ரோ வீசிய டிம் சவுதி

ஜோ பர்ன்ஸ் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் பேட்டிங் செய்துக் கொண்டிருந்தபோது, நியூசிலாந்து சார்பில் பந்துவீசிய டிம் சவுதி, தன்னுடைய கையில் பந்து வந்தவுடன், கிரீசை விட்டு வெளிவந்ததாக கூறி, ஸ்டம்பை நோக்கி மீண்டும் பந்தை த்ரோ செய்தார்.

 டேவிட் வார்னர் காட்டம்

டேவிட் வார்னர் காட்டம்

ஸ்டம்ப்பை நோக்கி, டிம் சவுதி வீசிய அந்த த்ரோ, ஜோ பர்ன்ஸ் கையை தாக்கியதால் இரண்டாவது பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் கோபமடைந்தார். அவர் உடனடியாக சவுதியின் இந்த செயல் குறித்து கேள்வி எழுப்பினார்.

"நீங்கள் ரொம்ப நல்லவர்தான்"

கிரீசை விட்டு ஜோ பர்ன்ஸ் வெளியில் இருந்ததாக கூறி, ஸ்டம்ப்பை நோக்கி தான் வீசிய த்ரோவை நியாயப்படுத்தினார் டிம் சவுதி. இதையடுத்து பர்ன்சின் கையில் அந்த பந்து தாக்கியதாக அவரிடம் கோபத்துடன் தெரிவித்த டேவிட் வார்னர், டிம் ரொம்ப நல்லவர்தான் என்று குறிப்பிட்டார்.

 கட்டுக்குள் வந்த கோபம்

கட்டுக்குள் வந்த கோபம்

இதையடுத்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அம்பயர் அலீம் தர் இருவரும், அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் நிலைமை அத்துமீறாமல் சுமூகமாக சென்றது.

Story first published: Friday, December 13, 2019, 19:02 [IST]
Other articles published on Dec 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+