Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்கா போனாலும் நான் மாற மாட்டேன்.. கோஹ்லி சூளுரை

நாக்பூர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஆக்ரோஷமாகத்தான் பேட் செய்யப்போவதாக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.

நாக்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி இரட்டை சதம் விளாசினார். இந்திய அணி, இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பிறகு கேப்டன் விராட் கோஹ்லி செய்தியாளர்களை சந்தித்தார்.

கோஹ்லி நிருபர்களிடம் கூறியதாவது:

துரித பேட்டிங்

துரித பேட்டிங்

நான் எப்போதும் போலவே பேட் செய்ய விரும்புகிறேன். நல்ல பொஷிஷனுக்கு வந்துவிட்டு, ரன்னை தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பதுதான் எனது பாணி. இதனால் நமது பவுலர்களுக்கு, எதிரணியை மடக்குவதற்கு தேவையான போதிய கால அவகாசம் ஏற்படுத்திக்கொடுக்க முடியும். இதேபோன்ற ஆக்ரோஷமான அணுகுமுறையைத்தான் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பின்பற்றப்போகிறோம்.

கடமை முடியாது

கடமை முடியாது

நூறு அடிப்பதோடு கடமை முடிந்துவிட்டதாக நான் நினைப்பதில்லை. அதன் பிறகும் பெரிய ஸ்கோராக அதை மாற்ற வேண்டும் என விரும்புகிறேன். செஞ்சுரி அடித்ததும் மெத்தனமாக ஆடி அவுட்டானால் பிறகு அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் விழுந்துவிடும். இதை தடுக்க செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேன் தொடர்ந்து களத்திலேயே நிற்க வேண்டும். அவரால்தான், புதிதாக களமிறங்கும் பேட்ஸ்மேன்களைவிட எளிதாக பந்துகளை எதிர்கொள்ள முடியும் என்பதால் இது அவசியம்.

பாராட்டு

பாராட்டு

புவனேஸ்வர்குமார் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் இடைவெளி விட்டு டெஸ்ட் போட்டியில் ஆடினர். ஆனாலும் சிறப்பாக பந்து வீசினர். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து பிட்சுகளை சமாளிக்க இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்துக்கு சாதகமான பிட்சுகளை உருவாக்க சொன்னோம். கொல்கத்தா பிட்ச் அதற்கு ஏற்ப இருந்தது. நாக்பூரில் 2வது நாளிலேயே பிட்ச் ஸ்பின்னுக்கு சாதகமாகிவிட்டது என்றார்.

வெறுப்பில் இலங்கை கேப்டன்

வெறுப்பில் இலங்கை கேப்டன்

அதேநேரம், இலங்கை கேப்டன் சண்டிமால், தனது பேட்ஸ்மேன்கள் மீது குறை சொன்னார். டாஸ் வென்றும் சரியாக பேட் செய்யவில்லை, இந்தியா போன்ற அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 350 ரன்களையாவது எடுத்திருந்தால்தான் வெற்றி பெறுவது குறித்தோ அல்லது வலுவான போட்டி கொடுப்பது குறித்தோ யோசிக்கவே முடியும் என்று சண்டிமால் கூறினார். சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் என்று சண்டிமால் கூறினார்.

Story first published: Monday, November 27, 2017, 15:54 [IST]
Other articles published on Nov 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+