For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது இந்தியாவை இந்தியாவில் வீழ்த்துவதா.. ரொம்ப கஷ்டமாச்சேய்யா.. மார்னஸ் புலம்பல்

சிட்னி : இந்தியா மிகவும் வலிமையான எதிரணி என்று ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்திய அணியை எதிர்கொள்வது போல சவாலானது வேறெதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் முதன்முதலில் களமிறங்கும் லாபுசாக்னே, தனது அணியின் மூத்த வீரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களிடம் இருந்து தான் ஒருநாள் போட்டிகளை விளையாட கற்றுக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி, வரும் 14ம் தேதி முதல் ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே ராஜ்காட்டிலும் பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

 முதன்முதலில் களமிறங்கும் லாபுசாக்னே

முதன்முதலில் களமிறங்கும் லாபுசாக்னே

டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய திறமையை பறைசாற்றியுள்ள லாபுசாக்னே, தற்போது இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதல் முறையாக களமிறக்கப்பட்டுள்ளார்.

 கற்றுக் கொள்வது அதிர்ஷ்டம்

கற்றுக் கொள்வது அதிர்ஷ்டம்

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் முதல்முதலில் களமிறங்கும் லாபுசாக்னே, அணியின் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களிடம் இருந்து ஒருநாள் போட்டிகளை விளையாடுவது குறித்து கற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

"விளையாட மிகவும் பிடிக்கும்"

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடியுள்ள லாபுசாக்னே, குறைந்த ஓவர் போட்டிகளில் விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் முன்னதாக குயின்ஸ்லாண்ட்டிற்காக சில ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 இந்தியா குறித்து லாபுசாக்னே

இந்தியா குறித்து லாபுசாக்னே

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதன்முதலில் இடம்பெற்றுள்ள லாபுசாக்னே, இந்தியா மிகவும் வலிமையான எதிரணி என்று தெரிவித்துள்ளார்.

 லாபுசாக்னே கருத்து

லாபுசாக்னே கருத்து

இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் மிகவும் வலிமையாக உள்ளதாக குறிப்பிட்ட லாபுசாக்னே, இந்தியாவில் இந்தியாவை எதிர்கொள்வது மிகுந்த சவாலான விஷயம் என்றும், ஆனால் வலிமையான எதிரிகளை எதிர்கொள்வது சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 8, 2020, 21:29 [IST]
Other articles published on Jan 8, 2020
English summary
There is nothing tougher than India in India - Says Marnus Labuschagne
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X