For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யில் சிங்கிள் வெற்றிக்கு வழியில்லாமல் அலைந்த அணிதானே இந்தியா.. மேக்ஸ்வெல் கர்வ பேட்டி

By Veera Kumar

சிட்னி: உலக கோப்பை தொடங்கும் முன்பாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் சிங்கிள் வெற்றிக்கும் வழியில்லாமல் இருந்த அணிதான் இந்தியா.. அதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், என்று ஆணவத்தோடு பேட்டியளித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் 26ம்தேதி, சிட்னியில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் மோத உள்ளன. இந்திய அணி நடப்பு உலக கோப்பையில் எந்த ஒரு போட்டியிலும் தோற்காமல், அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.

தோற்ற ஆஸ்திரேலியா

தோற்ற ஆஸ்திரேலியா

ஆனால் ஆஸ்திரேலியாவோ, நியூசிலாந்திடம் தோற்றது. பெரிய அணிகளுக்கு ஷாக் கொடுப்பதில் கில்லாடிகளான வங்கதேசத்துடனான ஆஸ்திரேலிய போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கடும் சவாலை தரும் என்பது கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.

இது என்ன கேள்வி..

இது என்ன கேள்வி..

இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், இந்தியா குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: எதிலுமே தோற்காத இந்திய அணியை, எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பது ஆஸ்திரேலிய அணியின் மீதான கேள்வியாக இருக்கிறது.

இந்திய அணி மறந்திருக்காது..

இந்திய அணி மறந்திருக்காது..

இந்தியாவை, ஆஸ்திரேலியா எப்படி எதிர்கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில், இந்தியா ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இந்திய அணியின் நினைவில் இருந்தும் அந்த தோல்விகள் மறைந்திருக்காது என்று நினைக்கிறேன்.

இவங்களுக்கெல்லாம் பிளான் கேடா

இவங்களுக்கெல்லாம் பிளான் கேடா

இந்தியாவை அரையிறுதியில் எதிர்கொள்ள, தனியாகவெல்லாம், எந்த பிளானும் போடவேண்டியதில்லை. இதற்கு முன்பு இந்தியாவை எப்படி தோற்கடித்தமோ, அதே பாணியில்தான் இப்போதும், இந்தியாவை சந்திக்க உள்ளோம். ஒரு சில புதிய முயற்சிகள் வேண்டுமானால் செய்யப்படும்.

இதெல்லாம் ஒரு போட்டியா..

இதெல்லாம் ஒரு போட்டியா..

இந்தியா-ஆஸ்திரேலியா மோதலை, மிகப்பெரிய போட்டிபோல கிரிக்கெட் நிபுணர்களும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் வர்ணிக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தளவில், ஆஷஷ் தொடர்தான் (ஆஸி.-இங்கிலாந்து நடுவேயானது) மிகப்பெரிய போட்டியாக இன்னும் நீடிக்கிறது.

ஐபிஎல் ச்சும்மா..

ஐபிஎல் ச்சும்மா..

ஐபிஎல் போட்டிகளில் ஆடிய அனுபவம், உலக கோப்பையில் எனக்கு கை கொடுப்பதாக கருதவில்லை. உலக கோப்பை கட்டமைப்பு வேறு, ஐபிஎல் கட்டமைப்பு வேறு. இரண்டுக்கும் சம்மந்தம் இல்லை. இவ்வாறு மேக்ஸ்வெல் கூறியுள்ளார். ஆஸ்திரேலியான்னா பீட்டர் விடுறதும், ஆடுன்னா புளுக்கை போடுறதும் சகஜம்தான் என்கிறீர்களா... அதுவும் சரிதான்.

Story first published: Saturday, March 21, 2015, 15:15 [IST]
Other articles published on Mar 21, 2015
English summary
Dashing Australian batsman Glenn Maxwell today said the Indian team should remember that it hasn't won a single game against his side this summer and the hosts intend to keep it that way in Thursday's ICC World Cup semi-final against the defending champions.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+