Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை..இங்கிலாந்துக்கு முக்கிய இடத்தில் கேட் போட்ட இந்தியா.. டிவிஸ்ட்!

சென்னை: உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாக வேண்டும் என்பதற்காக இந்திய அணி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட தயாராகிக் கொண்டு இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாகும்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் நாளை மறுநாள் நடக்க உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இந்த ஆட்டம் பிங்க் பால் போட்டியாக நடக்க உள்ளது. இந்த போட்டியில் பிங்க் பந்தை பயன்படுத்தி அதிக விக்கெட் எடுக்கலாம் என்று இங்கிலாந்து பாஸ்ட் பவுலர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

பிங்க் பால்

பிங்க் பால்

பொதுவாக பிங்க் பந்து பாஸ்ட் பவுலிங்கிற்கு உதவும் என்பதால் இங்கிலாந்து வீரர்கள் இந்த திட்டத்தை வகுத்து இருந்தனர். ஆனால் இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஆகமதாபாத் பிட்ச் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. பிட்சில் இருக்கும் புல் எல்லாம் நீக்கப்பட்டு களிமண் வைத்து பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக மாற்றம்

மொத்தமாக மாற்றம்

இதனால் இந்த பிட்ச் மொத்தமாக களிமண் ஸ்பின் பிட்ச் தரையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பிட்ச் எப்படி இருந்ததோ அதேபோல் பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

டர்னர் வகை

டர்னர் வகை

டர்னர் வகை பிட்சாக உருவாக்கப்பட்டு இருப்பதால் இந்திய ஸ்பின் பவுலர்கள் இந்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாக வேண்டும் என்பதற்காக இந்திய அணி இந்த மாற்றத்தை செய்து இருக்கிறது.

அஸ்வின்

அஸ்வின்

இதனால் இந்த போட்டியிலும் அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்திய அணியும் எப்போதும் போல மூன்று ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இங்கிலாந்து அணிக்கு இந்திய ஸ்பின் பவுலர்கள் அதிக அளவில் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.

Story first published: Monday, February 22, 2021, 11:01 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+