என்ன பண்ணி வச்சு இருக்கீங்க.. திட்டி தீர்த்த பிசிசிஐ.. கடுப்பில் கோலி.. இப்படி ஒரு பெரிய சிக்கலா?
அஹமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அஹமதாபாத்தில் அடுத்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.
இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வென்றுள்ளது.

சிக்கல்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாக இரவு பகலாக நடக்க உள்ளது.

பிங்க் பால் போட்டி
இந்த பிங்க் பால் போட்டிக்காக அஹமதாபாத் பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. இந்த பிட்ச்தான் தற்போது இந்திய அணிக்கு சிக்கலாக மாறியுள்ளது. இந்த பிட்ச் தற்போது ஸ்பீட் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறியுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.

இந்திய வீரர்கள்
பொதுவாக பிங்க் பால் போட்டிகளில் இந்திய வீரர்கள் மோசமாக திணறுவார்கள். பிங்க் பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகும் என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக சிரமப்படுவார்கள். இந்த நிலையில் பிட்சும் கூட தற்போது முழுக்க முழுக்க இங்கிலாந்து அணிக்கு சாதகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அஹமதாபாத்
அஹமதாபாத் பிட்ச் பார்த்து பிசிசிஐ கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பிட்ச் அதிக புற்களை கொண்டு இருக்கிறது. இதனால் கோலியும் கொஞ்சம் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. பிட்சில் சில மாற்றங்களை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

மாற்றம்
இதனால் பிட்சில் மாற்றங்களையே செய்யும் பணி நடக்கிறது. இந்த பிட்ச் இப்படி இருப்பதால் இந்திய அணியில் இரண்டு ஸ்பின் பவுலர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகிய இரண்டு ஸ்பின் பவுலர்கள் ஆட வாய்ப்புள்ளது.

இன்னொரு பிட்ச்
இன்னொரு பக்கம் ஸ்பீட் பவுலர்கள் மூன்று பேர் ஆடுவார்கள். அதன்படி பும்ரா, இஷாந்த், பாண்டியா ஆகிய மூன்று ஸ்பீட் பவுலர்கள் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications