எல்லா பக்கமும் அழுத்தம்.. மொத்தமாக மாற்றப்படும் பிட்ச்.. பிசிசிஐ முடிவு.. இந்தியாவிற்கு சிக்கல்?
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் பிட்ச் போல மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவதற்கு ஸ்பின் பவுலர்களே முக்கிய காரணம் ஆகும்.
அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகியோர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்து அணியை வீழ்த்தினார்கள். இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் தற்போது பாராட்டி வருகிறார்கள்.

இந்திய அணி
இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் தேவையில்லாத பிட்ச் சர்ச்சை தற்போது உருவாகி இருக்கிறது. அகமதாபாத் பிட்ச் மோசமாக இருந்ததாகவும், ஸ்பின் பிட்ச் இந்திய அணிக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இது நெருக்கடியை கொடுத்துள்ளது.

பிட்ச்
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் மொத்தமாக மாற்றப்பட உள்ளது. ஸ்பின் பிட்ச் இல்லாமல் பேட்டிங் பிட்சாக மாற்றப்பட உள்ளது. முதலில் பேட்டிங் இறங்கும் அணி அதிக ரன்கள் அடிக்க வசதியாக இந்த பிட்ச் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

எப்படி நடக்கும்
போட்டி 5 நாட்களும் நடக்கும் வகையில் பிட்ச் மாற்றி அமைக்கப்படும் என்று கூறுகிறார்கள். இங்கிலாந்து அணி கொடுத்த அழுத்தம்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.இதனால் நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என்கிறார்கள்.

டெஸ்ட் போட்டி
அதே சமயம் இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்யும் நோக்கத்தில் இந்திய அணி விளையாடும். இந்த போட்டியில் டிரா செய்தாலே உலகக் கோப்பை டெஸ்ட் தொடருக்கு தேர்வாக முடியும் என்பதால் இந்திய அணி அதற்கு ஏற்றபடி தயார் ஆகும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications