Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்கதான் போட்டியை மாற்ற வேண்டும்.. அஸ்வினுக்காக கோலி கையில் எடுத்த "சென்னை அஸ்திரம்".. மாஸ் பிளான்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின்தான் கேம் சேஞ்சராக இருக்க போகிறார் என்று கூறுகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த போட்டி பிங்க் பால் போட்டியாகும். இரவு பகல் ஆட்டம் என்பதால் இதில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி தீவிரமாக முயன்று வருகிறது.

 தீவிரம்

தீவிரம்

இந்த போட்டிக்காக முதலில் பிட்ச் ஸ்பீட் பவுலிங் பிட்ச் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் அகமதாபாத் பிட்சும் ஸ்பின் பவுலிங் பிட்சாக மாற்றப்பட்டுள்ளது. இதில் இருந்த புற்கள் பெரிய அளவில் நீக்கப்பட்டு இருக்கிறது.

நீக்கம்

நீக்கம்

இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின்தான் கேம் சேஞ்சராக இருக்க போகிறார் என்று கூறுகிறார்கள். இந்த பிட்ச் முழுக்க முழுக்க அஸ்வினை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. சென்னை பிட்ச் இரண்டாவது டெஸ்டில் இருந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாதனை

சாதனை

இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இரண்டு பேருமே இங்கு ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. முக்கியமாக அஸ்வின் மீண்டும் 5+ விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். கோலி இதற்காக இரண்டு நாட்களாக பிட்சை நேரில் சென்று பார்த்து ஆலோசனை செய்து வருகிறார்.

அஸ்வின் கோலி

அஸ்வின் கோலி

அஸ்வின் கோலி இரண்டு பேருமே பிட்ச் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் டாஸ் இந்தியாவிற்கு எதிராக சென்றால் ஆட்டமும் இந்திய அணிக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணி எப்படியாவது டாஸ் வெல்ல முயற்சி செய்யும் என்று கூறுகிறார்கள் .

Story first published: Monday, February 22, 2021, 12:34 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+