
மெகா ஏலம் 2022
அதாவது புதிதாக வந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 அணிகளும் மெகா ஏலத்திற்கு முன்பாகவே 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். அதன்படி லக்னோ அணி ஏற்கனவே கே.எல்.ராகுல் , ரஷித் கான் ஆகியோரை தக்கவைத்த நிலையில் அகமதாபாத் அணி மட்டும் சூதாட்ட புகாரில் சிக்கியிருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அகமதாபாத் அணி தேர்வு
இந்நிலையில் அகமதாபாத் அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அகமதாப் அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனியர் வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர்
டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடந்தாண்டு காயம் காரணமாக வெளியேறினார். ஆனால் அவர் மீண்டும் அணிக்கு வந்த போதும் கேப்டன்சி பதவி திரும்பி தரப்படவில்லை. இந்த அதிருப்தியில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர், சம்பள தொகைகளை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அகமதாபாத் அணியின் கேப்டனாக செயல்பட சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
Recommended Video

சீனியர் வீரர்களின் திருப்பம்
இதே போல ஐதாராபாத் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர், அந்த அணியுடனான மனக்கசப்பால் தற்போது அகமதாபாத் அணியில் இணைந்திருப்பதாக தெரிகிறது. இதே போல மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, மோசமான ஃபார்மில் இருந்ததால் இந்த முறை கழட்டிவிடப்பட்டார். எனினும் அவர் மீது நம்பிக்கை வைத்து அகமதாபாத் அணி வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications