“விராட் கோலிக்கு டி20 அணியில் இடமில்லை”.. இதுக்கு மேலும் பொறுமை இல்லை.. முன்னாள் வீரர் பரபர பேட்டி!
மும்பை: இந்திய டி20 அணியில் விராட் கோலிக்கு இடமில்லை என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அதிரடியாக கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய பேசுப்பொருளாக இருப்பது கோலியின் டி20 வாய்ப்புகள் தான்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் அடிக்கடி ஓய்வெடுத்து வரும் கோலி, சொதப்பலில் இருந்து மட்டும் மீளாமல் உள்ளனர்.

கோலி ஃபார்ம்
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் 2 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த விராட் கோலி, நேராக இங்கிலாந்து தொடருக்கு வந்துள்ளார். இதில் 1 ரன்னும், 11 ரன்களும் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் 16 இன்னிங்ஸ்களில் 341 ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளார்.

அஜய் ஜடேஜா விளக்கம்
இந்நிலையில் அவரை டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார். விராட் கோலி ரன் அடிக்காதது மட்டுமே பிரச்சினை கிடையாது. அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் மிகவும் மோசமாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய சாதனையை தன் பக்கம் வைத்திருந்தாலும் தற்போது திணறுகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் அழுத்தத்தில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

அழுத்தம் உருவாகும்
தற்போதைய சூழலில் கோலியை இந்திய டி20 அணியில் சேர்த்து அணிக்குள் அழுத்தத்தை அதிகரிப்பதற்கு பதிலாக அவரை புறக்கணித்து வைப்பதே சிறப்பாகும். இதன்மூலம் இந்திய அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும். எனவே தேர்வுக்குழு அதிகாரிகள் அவர் குறித்து நன்கு யோசிக்க வேண்டும்.

கோலிக்கும் சிறந்தது
விராட் கோலிக்கும் இதுதான் சிறந்த முடிவாகும். சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு அவர் பயிற்சி எடுக்க வேண்டும். அதில் தனது பழைய ஃபார்மை கொண்டு வந்தவுடன் அணிக்கு திரும்பினால் நன்றாக இருக்கும். நான் ஒரு அணியை தேர்வு செய்யும் பட்சத்தில் நிச்சயம் விராட் கோலி அந்த அணியில் இருக்க மாட்டார் என அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications