Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே இரவில் ரூ.1100 கோடிக்கு சொந்தக்காரரான அஜய் ஜடேஜா.. கோலியை விட அதிக பணம் கிடைத்தது.. எப்படி?

ஜாம்நகர் : ஒரே இரவில் ஒருவரின் வாழ்க்கை தலைகீழ் மாறி இருப்பதை நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையின் நடந்தது நாம் பார்த்து இருக்கிறோமா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அஜய் ஜடேஜா தற்போது ஒரே இரவில் 1100 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் என்ற பகுதியை அரச குடும்பம் ஒன்று ஆண்டு வந்திருக்கிறது. முந்தைய காலத்தில் கிரிக்கெட்டை எல்லாம் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் விளையாடுவார்கள். அப்படித்தான் ரஞ்சித்சின் ஜடேஜா என்ற அரசர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்திருக்கிறார்.

ajay jadeja cricket jamnagar royal throne

அவர் நாவநகர் என்ற பகுதியை 1907 முதல் 1933 ஆம் ஆண்டு வரை ஆண்டு இருக்கிறார். இந்த சூழலில் சத்ருஷா சின் என்ற அரசர் தற்போது ஜாம்நகரின் அரசராக இருந்து வருகிறார். இவருக்கு இளம் வயதிலேயே மனைவியுடன் விவகாரத்தை ஏற்பட்டதால் குழந்தைகள் இல்லை. இவருடைய குடும்பம் மிகப்பெரிய அரண்மனை, பள்ளி,தங்க நகைகள் என பல சொத்துகளை நிர்வகித்து வருகிறது.

இவர்கள் சொத்து மதிப்பே 1100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் தன்னுடைய உறவினரான அஜய் ஜடேஜாவை தமது வாரிசாக இருக்கும்படி கூறியிருக்கிறார். இதனை அஜய் ஜடேஜா ஏற்றுக் கொண்டதை அடுத்து தற்போது ஜாம்நகரின் புதிய அரசராக பதவி ஏற்க உள்ளார். இதன் மூலம் அஜய் ஜடேஜாவுக்கு அரண்மனை உள்ளிட்ட பல சொத்துக்கள் கிடைத்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சத்துரசாசின் ஜடேஜா, தமது வாரிசாக அஜய் ஜடேஜா ஒப்புக்கொண்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மிகப்பெரிய பொறுப்பிலிருந்து நான் செல்கின்றேன். தற்போது இதற்கு சரியான நபராக அஜய் ஜடேஜா செயல்படுவார் என்று அவர் பாராட்டி இருக்கிறார்.

ஜாம்நகரின் மக்களின் ஆசீர்வாதம் அஜய் ஜடேஜாவுக்கு எப்போதும் போல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக 1992 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை அஜய் ஜடேஜா செயல்பட்டு இருக்கிறார். இந்திய அணியின் துணை கேப்டன் போன்ற பதவிகளும் அவர் இருந்திருக்கிறார்.

எனினும் கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கி அஜய் ஜடேஜா தடை பெற்றதால் அதன் பிறகு கிரிக்கெட் விளையாடுவதில்லை. இதை அடுத்து 2003 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் ஜடேஜா மீது எந்த தவறும் இல்லை எனக் கூறி அவரை சூதாட்டப் புகாரிலிருந்து விடுவித்தது.

Story first published: Sunday, October 13, 2024, 22:38 [IST]
Other articles published on Oct 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+