Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குழந்தைக்கு வெயிட்டிங்.. அதனால்தான் இப்படி.. கோலி பற்றி கீழ்த்தரமான கருத்து.. முன்னாள் வீரர் பரபர!

சிட்னி: இந்திய கேப்டன் கோலி அடுத்தடுத்து கேட்சுகளை விட்டு வருவது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கோலி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா வைத்த விமர்சனம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி 20 தொடரை இந்தியா வென்றுள்ளது. 2-0 என்ற கணக்கில் டி 20 தொடரில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

ஒருநாள் தொடரை இந்தியா 1 -2 என்ற கணக்கில் இழந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தயாராக தொடங்கி உள்ளனர்.

தொடக்கம்

தொடக்கம்

இந்த நிலையில் இந்திய கேப்டன் கோலி அடுத்தடுத்து கேட்சுகளை விட்டு வருவது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் இவர் கேட்ச் விட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மற்றும் இரண்டாவது டி 20 போட்டியிலும் விராட் கோலி கேட்ச் விட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

யார்

யார்

ஆரோன் பின்ச், மேத்யூ வேட் கொடுத்த கேட்ச்களை விட்டு கோலி அதிர்ச்சி அளித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கோலி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா வைத்த விமர்சனம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோலி குழந்தை பிறக்கும் குஷியில் இருக்கிறார். எனக்கு குழந்தை பிறக்க போகிறது, இந்தியா எப்படி போனால் என்ன என்று கோலி இருக்கிறார், என்று அஜய் ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.

கிண்டல்

கிண்டல்

கோலி மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கிறார். அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ள நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விராட் கோலி பாதியில் வெளியேற உள்ளார். டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார். அதன்பின் பிசிசிஐ அமைப்பிடம் பேறு கால விடுப்பு கேட்டு உள்ளார்.

குறிப்பிட்டார்

குறிப்பிட்டார்

இதை குறிப்பிட்டு கோலியை அஜய் ஜடேஜா விமர்சனம் செய்து இருந்தார். அஜய் ஜடேஜாவின் இந்த மோசமான கருத்தை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். கோலி அப்பாவாக போவது அவரின் தனிப்பட்ட விஷயம். இதை பற்றி இவ்வளவு கீழ் தரமாக பேசுவது தவறு. அஜய் ஜடேஜா மோசமான கருத்தை கூறியுள்ளார்.

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

அஜய் ஜடேஜா மட்டுமின்றி இன்னும் சில முன்னாள் வீரர்களும் கூட இதேபோல் மோசமான கருத்துக்களை கூறியுள்ளனர். இதை நெட்டிசன்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். கர்ப்பம், குழந்தை பிறப்பு இதை எல்லாம் வைத்து கிண்டல் செய்வதை கிரிக்கெட் விமர்சகர்கள் நிறுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Story first published: Monday, December 7, 2020, 22:46 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+