Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20ல் புஜாரா ஓப்பனிங் ஆடுனா?... புதுசா ட்ரை பண்ணனும்... கோலியை வருத்தெடுக்கும் அஜய் ஜடேஜா

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கோலியின் வீயூகம் குறித்து முன்னாள் வீரர் ஜடேஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளார்.

முதல் டி20 போட்டியில் விராட் கோலியின் தவறான வியூகத்தால் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ரிஷப் பண்ட்-ஐ ஏன் ஓப்பனிங் ஆட வைக்கவில்லை என்பது போல் கேள்வி கேட்டு கோலி மீது கோபம் காட்டியுள்ளார்.

மோசமான முடிவு

மோசமான முடிவு

முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே முக்கிய காரணமாய் பார்க்கப்படுகிறது. மேலும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது குறித்தும் தற்போது முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஜடேஜா

ஜடேஜா

இதுகுறித்து பேசிய அஜய் ஜடேஜா, ரோகித் சர்மா அணியில் இருப்பார் என்றும் இந்திய அணி புதிய ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தும் என போட்டிக்கு முன்னர் கோலி கூறினார். எனவே நான் ஆக்ரோஷ விளையாட்டிற்காக பண்ட் ஓப்பனிங்கும், அடுத்ததாக ஹர்த்திக் பாண்ட்யாவும் இரங்குவார்கள் என எதிர்பார்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. நீங்கள் அதிரடி காட்ட விரும்பினால் அதற்கான வீரர்களை தான் பயன்படுத்த வேண்டும். புஜாராவை அதிரடியாகவும், சேவாக்கை தடுப்பாட்டமும் ஆடச்சொல்ல முடியாது.

முயற்சி என்ன?

முயற்சி என்ன?

இந்திய அணி தோல்வியை பற்றி கூட பேச வேண்டாம். முதல் போட்டியில் கேப்டன் கோலி, புதிதாக என்ன யுக்தியை முயற்சி செய்தார். ஷிகர் தவான் எப்படி ஆடுவார் என தெரியும். அதே போல் கே.எல்.ராகுல் பற்றியும் அறிந்ததே. எப்போதும் 2வது விக்கெட்டிற்கு சஞ்சு சாம்சன் களமிறங்குவார், ஆனால் இந்த முறை பண்ட் இரங்கியுள்ளார். இதில் பெரிய யுக்தியை கோலி செய்து பார்த்தார் என எனக்கு புரியவில்லை என ஜடேஜா தெரிவித்தார்.

2வது போட்டி

2வது போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி இந்திய அணியை பெரிய மாற்றத்துடன் களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஓப்பனிங்கில் ரோகித் - ராகுல் ஜோடியை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Monday, March 15, 2021, 14:38 [IST]
Other articles published on Mar 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+