Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவான் அங்க என்னதாங்க பன்றாரு..?? பிசிசிஐ தொடர்ச்சியாக தரும் ஏமாற்றம்.. அஜய் ஜடேஜா கடும் அதிருப்தி!

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷிகர் தவான் என்னதான் செய்கிறார் என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சதமடிக்கும் வரை சென்று ரசிகர்களிடம் தனி கவனத்தை ஈர்த்துள்ளவர் ஷிகர் தவான் தான்.

ஓரம்கட்டப்பட்ட தவான்

ஓரம்கட்டப்பட்ட தவான்

இந்தியாவின் முதன்மை ஓப்பனராக இருந்த ஷிகர் தவான் 2019ம் ஆண்டுக்கு பிறகு வாய்ப்புகள் குறைந்துக்கொண்டே இருந்தன. அவரின் இடத்திற்கு கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சுப்மன் கில் என பல இளம் வீரர்கள் வந்ததால் தவான் 3வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஒதுக்கப்பட்டார். ஆனால் திடீரென இலங்கை தொடருக்கு அழைக்கப்பட்ட தவான், மீண்டும் பெரிய இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அழைக்கப்பட்டுள்ளார்.

தரமான கம்பேக்

தரமான கம்பேக்

எனினும் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வரும் ஷிகர் தவான் தொடர்ச்சியாக ரன் வேட்டை நடத்தி வருகிறார். வெஸ்ட் இண்டீஸுடனான முதல் போட்டியில் கூட 99 பந்துகளில் 97 ரன்களை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் தவான் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஜடேஜாவின் கோபம்

ஜடேஜாவின் கோபம்

இந்நிலையில் தவானுக்கு வாய்ப்பு கொடுத்ததில் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அதிருப்தியடைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தவான் இந்த தொடரில் என்ன செய்கிறார் என்று எனக்கு புரியவேயில்லை. 6 மாதங்கள் முன்பு அவர் ஒதுக்கப்பட்டார். மற்ற வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது திடீரென மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இப்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு வந்துக்கொண்டிருக்கிறது.

ரோகித்தின் திட்டம்

ரோகித்தின் திட்டம்

பிசிசிஐ தேர்வுக்குழு என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறது? இந்திய கேப்டன் ரோகித் சர்மா, மிகவும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை இனி ஆடப்போகிறோம் எனக்கூறியிருந்தார். அப்படியென்றால் நிதானமான தொடக்கத்தை பெறும் ஷிகர் தவானை ஏன் சேர்த்து வருகிறார்கள். அவர் அணியில் இருக்கவே கூடாது என அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 23, 2022, 16:59 [IST]
Other articles published on Jul 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+