Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை காப்பாற்றுங்க சச்சின்.. முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கோரிக்கை.. ஒரு கால் தான் சரி ஆயிடும்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இந்த நிலையில்,மீண்டும் பழைய படி அவர் ரன் அடிக்க வேண்டும் என்றால் அது சச்சின் நினைத்தால் மட்டும்தான் முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

அதற்கு காரணம், சச்சினும் இது போன்ற சூழலை சந்தித்து தான் தற்போது சாதனை படைத்திருக்கிறார்.

 ஜிம்பாப்வே தொடர்

ஜிம்பாப்வே தொடர்

ஒரு காலத்தில் சதங்கள் விளாசுவதை ஒரு காபி சாப்பிடுவது போல், பழக்கமாக விராட் கோலி வைத்திருந்தார். ஆனால், நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் விராட் கோலி அரை சதத்தை கூட எட்டவில்லை. இதனால் விராட் கோலியின் இடம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விராட் கோலி பழைய பார்மை மீட்க ஜிம்பாப்வே தொடரில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

சச்சினும் அனுபவித்தார்

சச்சினும் அனுபவித்தார்

இந்த நிலையில் இது குறித்து பேசிய அஜய் ஜடேஜா, விராட் கோலியின் பிரச்சனையை ஒரே ஒருவரால் மட்டும் தான் தன்னுடன் தொடர்புபடுத்தி தீர்வு சொல்ல முடியும். அது சச்சின் தான்.. விராட் கோலி என்னென்ன சிரமத்தை சந்தித்தாரோ, அதனை சச்சின் டெண்டுல்கர் அனுபவித்தார். சச்சின் இதுபோன்ற பல சறுக்கள்களை தாண்டி தான் தற்போது உச்சத்தை தொட்டு உள்ளார்.

ஒரு போன் கால்

ஒரு போன் கால்

எனவே சச்சின் உடைய உதவியை விராட் கோலி நாட வேண்டும். பார்மை எப்படி மீட்பது என்பது குறித்து சச்சினின் அறிவுரையை விராட் கோலி கேட்க வேண்டும். ஆனால் இளம் வீரர்களுக்கு தன்னுடைய பேட்டிங் குறித்து பெரியவர்களிடம் கேட்க கொஞ்சம் கூச்சமாக இருக்கும்.இதனை சச்சின் புரிந்துகொண்டு விராட் கோலிக்கு போன் மூலம் அழைப்பு விடுத்து விருந்துக்கு கூப்பிட வேண்டும்.

 அஜய் ஜடேஜா நம்பிக்கை

அஜய் ஜடேஜா நம்பிக்கை

அதில் விராட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரைகளை சொல்ல வேண்டும். தாம் சறுக்களை சந்தித்தபோது அதை எப்படி எதிர்கொண்டேன் என்று சச்சின் தனது அனுபவங்களை விராட் கோலி இடம் பகிர வேண்டும். விராட் கோலி மீண்டும் பழையபடி ரன் அடிக்க சச்சின் உடைய ஒரே ஒரு போன் கால் போதும்.இதனை சச்சின் செய்வார் என நான் நம்புகிறேன் என்று ஜடேஜா கூறினார்.

Story first published: Saturday, July 23, 2022, 21:38 [IST]
Other articles published on Jul 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+