தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோல்வி.. தோனி தாங்க காரணம்.. ஜடேஜா சொன்ன புதிய கருத்து
டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு தோனி தான் காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் 10 ஓவரில் வெறும் 43 ரன்கள் மட்டுமே அடித்து தடுமாறியது.
எனினும் டேவிட் மில்லர் கடைசிவரை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றியை தேடி தந்தார்.

மில்லருக்கு பாராட்டு
இதனால் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் எஞ்சிய இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அஜய் ஜடேஜா டேவிட் மில்லர் இந்த ஆட்டத்தில் விளையாடிய விதம் வேறு லெவலுக்கு இருந்தது.

அஜய் ஜடேஜா விமர்சனம்
மில்லர் எந்த அபாயகரமான ஷாட்டையும் ஆடவில்லை. அவர் இன்னிங்ஸ் முழுவதும் அமைதியாக இருந்தார். எதிரணி எப்போது தவறு செய்யும் என்று காத்துக் கொண்டிருந்தார். அவர் போட்டியை கடைசிவரை கொண்டு சென்றதால் தென்னாப்பிரிக்கா வென்றது.இதனை தோனி தான் கிரிக்கெட் உலகத்திற்கு கற்றுக் கொடுத்தார்.தோனி சொல்லிக் கொடுத்த பாடத்தால் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம் என்று அஜய் ஜடேஜா குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரே பார்முலா
இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா குறித்து பேசிய அவர் , கேப்டனாக ரோஹித் சர்மா அவருக்கு இருக்கும் பந்துவீச்சாளர்களை சரியான முறையில் பயன்படுத்த வில்லையோ என்று நான் கருதுகிறேன். ரோகித் சர்மா ஒரே பார்முலாவை பயன்படுத்தி வருகிறார். அதாவது இந்த சூழலில் இந்த பந்துவீச்சாளரை மட்டும் தான் பயன்படுத்துவேன் அப்படி என்று ரோகித் சர்மா ஒரே யுத்தியை பயன்படுத்துகிறார்.

ஏற்றுகொள்ள முடியாது
உதாரணமாக ஆர்ஸ்தீப் சிங் முதல் 3 ஓவர்களை வீசி இருக்கலாம். ஆனால் அவர் கடைசியில் சில ஓவர்கள் வீச வேண்டும் என ரோகித் சர்மா அவருக்கு தொடக்கத்தில் அதிக ஓவர் கொடுக்காமல் வைத்திருக்கிறார்.ரோகித் சர்மாவின் முடிவுகளுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதனை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்று அஜய் ஜடேஜா கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications