Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎலில் விளையாட்றாங்க, நாட்டுக்கு என்றால் நோ சொல்றாங்க.. ரோகித் சர்மாவை விமர்சித்த ஜடேஜா

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் என்றால் விளையாடுகிறார்கள். ஆனால் நாட்டுக்கு என்றால் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர்களை முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து போன்ற பெரிய அணியை எதிர்கொள்ளும் போது சீனியர்களுக்கு ஓய்வு வழங்குவது சரியா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வருத்தம் இல்லை

வருத்தம் இல்லை

இது குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் டூல், வேகப்பந்துவீச்சாளர் பவுல்ட் போன்ற வீரர்கள் எல்லாம் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகி t20 லீக் தொடரில் விளையாடுவது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் சிறுவயதில் இருந்து நாட்டுக்காக பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள்.

யோசித்து பாருங்கள்

யோசித்து பாருங்கள்

தற்போது வயதானதை தொடர்ந்து தான் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட செல்கிறார்கள். ஆனால் என்னுடைய கவலை எல்லாம் இளம் வீரர்கள் குறித்து தான். தொடக்கத்திலே சர்வதேச கிரிக்கெட்டை விட்டு உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாட செல்வது சரியா என்று அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

சிக்கலை தரும்

சிக்கலை தரும்

இதனை தொடர்ந்து பேசிய அஜய் ஜடேஜா, எந்த கிரிக்கெட் வீரர்களும் தங்கள் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் உலகம் முழுவதும் உள்ள டி20 தொடரில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீங்கள் நாட்டுக்காக விளையாடும்போது அணிக்கு நீங்கள் தேவை என்கிறபோது நீங்கள் வேறு நாட்டிற்குச் சென்று டி20 தொடரில் விளையாடினால் அது நிச்சயம் சிக்கலை கொடுக்கும்.

கேப்டன்களே செல்கிறார்கள்

கேப்டன்களே செல்கிறார்கள்

இளம் வீரர்களை வங்கதேசம் போன்ற தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு பெரிய அணிகளுக்கு எதிராக மட்டும் விளையாடுகிறார்கள். இந்த கலாச்சாரம் மிகவும் தவறு. தற்போது கத்துக்குட்டி அணிகளும் சிறப்பாக விளையாட தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு எதிராக நீங்கள் விளையாடினால் மட்டுமே அவர்கள் வளர்ச்சி அடைய முடியும். ஆனால் இப்போது கேப்டன்களே தொடர்களில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது என்று அஜய் ஜடேஜா ரோகித் சர்மாவை தாக்கும் விதமாக பேசினார்.

Story first published: Friday, November 18, 2022, 20:45 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+