Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரித்வி ஷாவை பார்த்துக்கோங்க.. சுப்மான் கில்லுக்கு அஜய் ஜடேஜா எச்சரிக்கை.. என்ன நடந்தது?

சட்டோகிர்ம் : வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டியின் போட்டியின் 2வது இன்னிங்சில் சுப்மான் கில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.

இதன் மூலம் இந்திய அணி வங்கதேசத்தை விட பலமான நிலையில் இருக்க உதவியாக இருந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா காயத்தில் இருந்து திரும்பிய உடன், கில் அணியில் தக்கவைக்கப்படுவதற்கு வலுவான காரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று புஜாராவும் 4 ஆணடுகளுக்கு பிறகு சதம் அடித்துள்ளார். இந்த நிலையில், சுப்மான் கில்லுக்கு முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அறிவுரை வழங்கியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,

அற்புதமான உணர்வு

அற்புதமான உணர்வு

டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் என்பது மிகப் பெரிய தருணம். அது எப்படி உணர்கிறது என்று கூட எனக்குத் தெரியவில்லை. இது ஒரு எண் ஆனால் மிக முக்கியமான ஒன்று. என்னால் என்னைப் பற்றி மட்டுமே பேச முடியும், மற்றவர்களைப் பற்றி அல்ல. இது ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவது போன்றது. , இந்த எண் அப்படி ஒரு விளைவை ஏற்படுத்துகிறது.

ஃபார்மை தொடர வேண்டும்

ஃபார்மை தொடர வேண்டும்

அதற்கான அழுத்தம் அல்லது காத்திருப்பு என்பது வார்த்தையால் விவரிக்க முடியாதவை. சுப்மான் கில் அந்த தருணத்தை சுவைக்க வேண்டும். 18 சதங்கள் அடித்த புஜாராவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடித்து கொண்டாடியதை பார்த்தாலே எங்களுக்கு அதன் காத்திருப்பு புரியும். தற்பாது சுப்மான் கில் தன்னுயை பார்மை தொடர வேண்டும். அது தான் முக்கியம்.

முன்னேற வேண்டும்

முன்னேற வேண்டும்

சுப்மான் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கை என்ற சக்கரம் இங்கிருந்து முன்னேறும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் இவர் ஒரு சதம் அடித்தால் போதும், என்று திரும்பி செல்பவன் அல்ல என்பதை காட்டியுள்ளார். பிருத்வி ஷாவும் சுப்மான் கில்லும் ஒரே வயது தான். பிர்த்வி தனது முதல் டெஸ்டில் சதம் அடித்தார், ஆனால் அவர் தற்போது இந்திய அணியிலேயே இல்லை. எனவே பிரித்வி போல் ஆகி விடாமல் சுப்மான் கில் இங்கிருந்து முன்னேற வேண்டும்.

ஏற்பட கூடாது

ஏற்பட கூடாது

சுப்மான் கில்லிடம் திறமை உள்ளது மற்றும் அவரைப் பற்றி நான் கண்டறிந்த சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் தன்னுடைய கிரிக்கெட் திறமையை வளர்த்து கொள்கிறார். ஆனால் பல திறமையான வீரர்கள், முதலில் சிறப்பாக விளையாடி விட்டு, பின்னர் ரன் எடுக்க முடியாமல் திணறுவார்கள். அப்படி ஒரு நிலை சுப்மான் கில்லுக்கு ஏற்பட கூடாது.

Story first published: Saturday, December 17, 2022, 20:42 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+