Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை படைத்த அஜாஸ் பட்டேல் நியூசிலாந்து அணியிலிருந்து அதிரடி நீக்கம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

Recommended Video

New Zealand omit Ajaz Patel from Test squad | NZ vs BAN | OneIndia Tamil

இதில் மும்பை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஜிம் லேக்கர், கும்ப்ளேவிற்கு பிறகு ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை அஜாஸ் பட்டேல் படைத்தார்

அஜாஸ்க்கு அங்கீகாரம்

அஜாஸ்க்கு அங்கீகாரம்

அஜாஸ் பட்டேலுக்கு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அஸ்வின் தனது ஜெர்சியில் இந்திய வீரர்களின் கையெழுத்தை இட்டு அதனை பரிசாக அஜாஸ் பட்டேலுக்கு வழங்கினார். மேலும், டிவிட்டரில் அஜாஸ் பட்டேலுக்கு நீல நிற டிக் வாங்கி தந்தார் அஸ்வின்

அணியிலிருந்து நீக்கம்

அணியிலிருந்து நீக்கம்

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் சேர்க்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், நியூசிலாந்து அணியும் நிறவெறியுடன் அஜாஸ் பட்டேலை நீக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினர்

பயிற்சியாளர் விளக்கம்

பயிற்சியாளர் விளக்கம்

எனினும், இது குறித்து விளக்கம் அளித்துள்ள பயிற்சியாளர் கேரி ஸ்டேத், சூழலுக்கு தகுந்த வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தார்.உலக சாதனை படைத்தும் அணியில் இடம் கிடைக்காத அஜாஸ் பட்டேலுக்காக தாம் வருந்துவதாகவும் கூறினார். கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வங்கதேச தொடரில் இடம்பெறவில்லை. இதனால் அணியின் கேப்டனாக டாம் லத்தாம் செயல்பட உள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இருந்த பௌல்ட் அணிக்கு திரும்புகிறார்.

அணி விவரம்

அணி விவரம்

டாம் லத்தாம் (கேப்டன்), கான்வே, வில் யங்,ராஸ் டைலர்,ஹென்ரி நிக்கோலஸ்,டேரல் மிட்செல்,டாம் பிளன்டல், ரச்சின் ரவிந்திரா,கெயில் ஜெமிசன்,டிம் சௌதி, நீல் வெக்னர்,மாட் ஹென்ரி, டிரென்ட் பௌல்ட், . முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 1ஆம் தேதியும்,2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 9ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்தப் போட்டி அமேசான் பிரைமில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Story first published: Thursday, December 23, 2021, 14:07 [IST]
Other articles published on Dec 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+