சொதப்பிய கோலியின் ப்ளான்.. திடீர் சர்ப்ரைஸ் தந்த புஜாரா - ரகானே.. விறுவிறுப்பான 4ம் நாள் ஆட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் போட்ட ப்ளான்கள் தோல்வியில் முடிந்துள்ளன.
Recommended Video
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது டெஸ்ட் போட்டியில் மல்லுக்கட்டி வருகின்றன.
முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் அடித்ததன் மூலம், இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து. இந்த நிலையில் தான் 4ம் நாளான இன்று இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்கமே அதிர்ச்சி
மோசமான வானிலை மற்றும் நேரக்குறைவு காரணமாக 2வது இன்னிங்ஸில் விரைவாக 3000 ரன்கள் அடித்து, 270 - 320 ரன்கள் என்ற டார்கெட்டை இங்கிலாந்துக்கு நிர்ணயிக்க முடிவெடுத்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா அடுத்தடுத்து இங்கிலாந்து பவுலர் மார்க்வுட் வேகத்தில் தங்களது விக்கெட்டை இழந்தனர். ராகுல் 5 ரன்களிலும், ரோகித் 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

மாற்றப்பட்ட ப்ளான்
இரு தொடக்க வீரர்களையும் இந்திய அணி 30 ரன்களுக்குள் இழந்துவிட்டதால், கோலியின் ப்ளான் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மிடில் ஆர்டரை கொண்டு ரன்களை உயர்த்த வேண்டும் என்பதால், நிதானமாக ரன்களை குவித்து, பந்துவீச்சில் திறமையை காண்பிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னர் வந்த கேப்டன் கோலி நிதானமாக ஆடிய போதும் சாம் கரணின் மேஜிக்கால் 20 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார்.

திடீர் சர்ப்ரைஸ்
இந்தியாவின் மிடில் ஆர்டரில் இருக்கும் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்தது. இதனால் இந்தியாவின் கதை முடிந்துவிட்டது என்ற அளவிற்கு ரசிகர்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் கம்பேக் கொடுத்தனர் புஜாரா - ரகானே. மிகவும் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 4வது விக்கெட்டிற்கு 100 ரன்களை சேர்த்தது. ஆனால் நீண்ட நேரம் இந்த ஜோடி நிலைக்கவில்லை. அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றினர். சிறப்பாக விளையாடிய அஜிங்கியா ரகானே 61 ரன்கள் எடுத்தார். 206 பந்துகளை எதிர்கொண்ட சட்டீஸ்வர் புஜாரா 45 ரன்களை எடுத்தார்.

ஆட்ட நேர முடிவு
இதன் பின்னர் வந்த ஜடேஜா, வழக்கம் போல ஒரு 40 ரன்கள் அடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரோ மூன்றே ரன்களில் மொயின் அலியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் நிதானமாக ரன்களை சேர்த்து வந்த சூழலில் வெளிச்சமின்மை காரணமாக 4வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. நாளைய ஆட்டத்தில் வேகமாக ரன்களை குவிக்க முற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications